முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் மேனனை காப்பாற்ற மருந்துகள் அனுப்பப்பட்டன

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், ஏப்.25 - கடத்தப்பட்ட கலெக்டர் மேனன் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், எனவே மருந்துகளை அனுப்புமாறும் நக்சல் தீவிரவாதிகள் கேட்டுக் கொண்டதையடுத்து கடத்தப்பட்ட கலெக்டரை காப்பாற்ற சத்தீஸ்கர் அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. நக்சல்கள் கேட்டுக் கொண்டபடி அவருக்காக மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தாங்கள் விரும்பும் 3 நபர்களை மத்தியஸ்தர்களாக அறிவித்திருந்தனர். அவர்களில் இருவர் அதை ஏற்க மறுத்து விட்டனர். ஒருவர் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். மற்றொருவர் அகில இந்திய ஆதிவாசி மகாசபை தலைவர் மணீஸ் குஞ்சம். 

தூதுக்குழுவாக செல்ல மணீஸ் குஞ்சம் மறுத்தாலும் கூட, கலெக்டரை காப்பாற்றும் பொருட்டு மருந்துகளை எடுத்துச் செல்ல அவர் ஒப்புக் கொண்டு விட்டார். அதன்படி அவர் மருந்துகளுடன் நக்சல்கள் இருக்கும் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தூதுக்குழுவினராக செல்ல மறுத்தாலும் இதையாவது செய்தாரே என்று அம்மாநில மக்கள் அவரை பாராட்டினர். கடத்தப்பட்ட கலெக்டர் மேனனுக்கு வயது 32. இவர் ஒரு ஆஸ்துமா நோயாளி. மேலும் கடந்த நான்கு நாட்களாக இவர் சாப்பிடவே இல்லையாம். அதனாலும் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த மணீஷ்குஞ்சம் மேனனின் உயிர் ரொம்ப முக்கியம். அதனால்தான் நான் மருந்துகளுடன்  போகிறேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்