முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஜனாதிபதியாக அன்சாரியை தேர்வு செய்ய ஆதரவு

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. ஏப்.25 - அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது  அன்சாரியை வேட்பாளராக நிறுத்தலாம் என்று  லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். டெல்லியில் பாராளுமன்றத்திற்கு வெளியே ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை நிறுத்த தங்களது கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்றார்.

நமது துணை ஜனாதிபதி அன்சாரியை  ஜனாதிபதியாக்க வேண்டும். அந்த பதவிக்கு அவர்தான் நல்ல வேட்பாளர் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை ஆதரிப்பீர்களா? என்று கேட்டதற்கு பதில் அளித்த லாலு பிரசாத் அவர் ஏற்கநவே ஜனாதிபதியாக  இருந்து விட்டார் என்றும் அதனால் இப்போது  அன்சாரியை ஜனாபதியாக்க வேண்டும் என்றும் ஏற்கனவே கள் சிறப்பானவையாக உள்ளன என்றும் அடுத்த ஜனாதிபதிக்கு அவரையே நிறுத்தலாம் என்றும் அவர் கூறினார். 

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியிடம் இது குறித்து கேட்டதற்கு  இப்போதைக்கு இது குறித்து எதுவும் சொல்ல முடியாது என்றும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தெரிந்த பிறகே தங்களது நிலைப்பாட்டை  தெரிவிக்க முடியும் என்றும் கூறினார்.

பா.ஜ.க. மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் இது குறித்து கேட்டதற்கு அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருமித்த வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக தெர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.

ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைவதால்  அப்பதவிக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தன்னிச்சையாக காங்கிரஸ் கட்சி ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க போதுமான ஓட்டு பலம் இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை  நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்