முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்துத்துவா, பா.ஜ.வின் சந்தர்ப்பவாத கொள்கைதான்: விக்கிலீக்ஸ் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.- 27 - பாரதிய ஜனதாவின் இந்துத்துவா கொள்கை என்பது சந்தர்ப்பவாத கொள்கைதான் என்று அருண்ஜெட்லி கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இதனால் பாரதிய ஜனதாவுக்கு மேலும் கெட்ட பெயர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அமெரிக்க இணையதளமான விக்கிலீக்ஸ், உலக நாடுகளின் ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி வருகிறது. மத்தியில் காங்கிரஸ் அரசு  நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றிபெறுவதற்காக எம்.பி.க்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பணம் கொடுத்ததாக விக்கிலீக்ஸ் முதலில் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது பாரதிய ஜனதா குறித்த பல தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் பாரதிய ஜனதாவின் இந்துவத்துவா கொள்கை பற்றியதாகும். இந்து தேசம் அமைய வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதாவின் கொள்கையாகும். ஆனால் இது ஒரு சந்தர்ப்பவாத கொள்கையாகும் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி கூறியதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக பொறுப்பாளர் ராபர்ட் பிளாக்கை அருண்ஜெட்லி சந்தித்து பேசியபோது பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவா கொள்கை குறித்து விளக்கியதாகவும் அதை ராபர்ட் தெரிவித்தார் என்றும் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. கண்ணாடி மாளிகைக்குள் இருந்து கல்வீச வேண்டாம் என்று அருண்ஜெட்லியை காங்கிரஸ் எச்சரித்தபோது சந்தர்ப்பவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை என்று அருண்ஜெட்லி உறுதியாக மறுத்தார் என்றும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து முஸ்லீம்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்து கொண்டியிருக்கிறார்கள். அதனால் இந்துத்துவா கொள்கைகளை பயன்படுத்தினால் அந்த மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என்று ராபர்ட்டிடம் அருண்ஜெட்லி கூறியதாகவும் அதை எங்களிடம் தெரிவித்ததாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony