முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் பயிற்சி அதிகாரி மீதான புகார்: நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.26 - திருமண மோசடி புகாருக்குள்ளான போலீஸ் பயிற்சி அதிகாரி பற்றி சமூகநல அதிகாரி விசாரித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. சேர்ந்த இளம்பெண் பிரிய தர்ஷினி. இவர் பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் மீது காதல் திருமண மோசடி மற்றும் வரதட்சணை புகார் கொடுத்தார். இந்த புகார் பற்றி மாவட்ட சமூக நல அதிகாரி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் பரிந்துரை செய்தார். இந்நிலையில் பிரிய தர்ஷினி தனது புகார் மீது விசாரணை நடத்திய சமூகநல அதிகாரியின் அறிக்கை அடிப்படையில் வருண்குமார் மீது பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ளக்கோரி வருண்குமார் மனுதாக்கல் செய்தார். பின்னர் இந்த வழக்கை விசாரித்து வரும் நீnullதிபதி நாகமுத்து இரு தரப்பினரும் பேசி தீர்வு காணும்படி அறிவுரை வழங்கினார். இல்லையேல் மனு மீது சட்டப்படி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வருண்குமார் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர் வாதாடுகையில் வருண்குமார் சமுதாயத்தில் அந்தஸ்துடன் போலீஸ் அதிகாரியாக இருந்து வருகிறார். பிரியதர்ஷினி கொடுத்த புகாரின் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய முடியாது என்றார். அப்போது பிரியதர்ஷினி வக்கீல் எஸ்.பிரபாகரன் வாதாடுகையில், போலீஸ் சி.டி.பைலில் பிரியதர்ஷினி கூறிய குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சமூக நல அதிகாரி ஆலோசனை மட்டும்தான் வழங்க முடியும். புகார் உண்மையா? பொய்யா? என்று விசாரிக்க முடியாது. புகார் கொடுத்து 5 மாதம் ஆகிவிட்டது. இதுவரை எப்.ஐ.ஆர். போடவில்லை. போலீசுக்கு ஒரு nullநீதி, பொது மக்களுக்கு ஒரு நீதியா? சமூகநல அதிகாரியும் பிரிய தர்ஷினியிடம் வருண்குமார் போலீஸ் அதிகாரியாக உள்ளார். அவர் மீது வழக்கு போட முடியாது என்று கூறியுள்ளார் என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி புகார் மீது 5 மாதங்கள் ஆகியும் வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என்று அரசு வக்கீலிடம் கேட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரித்த மாவட்ட சமூகநல அதிகாரியின் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்