முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கசாப் அப்பீல் விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.26 - மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத்தண்டனையை எதிர்த்து தீவிரவாதி முகமத் அஜ்மல் அமீர் கசாப் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தான். இது தொடர்பான விசாரணை முடிந்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் 10 பேர் மும்பையில் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 166 பேர் பலியானார்கள் மற்றும் பலர் துப்பாக்கிய குண்டு காயம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி மும்பையில் தாக்குதல் நடத்திய அந்த 10 தீவிரவாதிகளில் கசாப் தவிர மீதி 9 பேர் கொல்லப்பட்டனர். கசாப் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி கசாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் கசாப் அப்பீல் செய்தான். தூக்குத்தண்டனையை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. அதையும் எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் கசாப் அப்பீல் செய்தான். இந்த அப்பீல் மனு மீதான விசாரணை நீதிபதிகள் அப்டாப் ஆலம் சி.கே. ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் சுமார் இரண்டரை மாத காலம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்