முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போபர்ஸ் விவகாரம்: மத்தியரசு மீது வ.கம்யூ. குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.26 - போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் தொடர்பாக குற்றிவாளிகளை வெளிப்படுத்த மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது என்று வலது கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இந்திய ராணுவத்திற்கு சுவீடன் நாட்டில் இருந்து போபர்ஸ் பீரங்கி வாங்கப்பட்டது. இதில் ரூ. 200 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு சுமத்துப்பட்டுள்ளது. அதனால் ராஜீவ் காந்தி தலைமையில் இருந்த மத்திய அரசு தோல்வி அடைந்தது. மத்தியில் நிதி அமைச்சராக இருந்த வி.பி.சிங் பிரதமராக பதவி ஏற்றார். இது காலம் கடந்த சம்பவம் தற்போது அந்த இரண்டு தலைவர்களும் உயிருடன் இல்லை.  இது தொடர்பான வழக்கில் இத்தாலி நாட்டை சேர்ந்தவரும் சோனியா குடும்ப நண்பருமான குவாத்ரோச்சி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனாள் அவர் இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடுகளில் தஞ்சம்புகுந்து வழக்கில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொண்டுள்ளார். 

இந்தநிலையில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் மீண்டும் கிளம்பியுள்ளது. சுவீடன் நாட்டை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஸ்டென் லிந்தஸ்ட்ரோம் என்பவர் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். போபர்ஸ் பீரங்கிபேர ஊழல் தொடர்பாக நான் 350-க்கும் மேற்பட்ட தஸ்தாவேஜூகளை பத்திரிகையாளர்களுக்கு கொடுத்து வெளியிட்டேன். இந்த பீரங்கி பேர ஊழலில் குற்றவாளிகளை வெளிப்படுத்தி அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுப்பதில் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியே மெத்தனமாகத்தான் இருந்தார் என்றும் ஸ்டென் கூறியுள்ளார். இதனையொட்டி போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

போபர்ஸ் பீரங்கி ஊழலில் குற்றவாளிகளை வெளிப்படுத்த மத்திய அரசுக்கு அரசியல் சாதுர்யம் இல்லை என்று வலது கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான குபேஸ் குப்தா கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார். இது மிகவும் கண்டனத்திற்குரியது. போபர்ஸ் ஊழலால் நாட்டின் நற்பெருக்கு பெரும் கலங்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் பொய் என்று தெரியவந்துள்ளது. இந்த ஊழலுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை வெளியிட மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. இதன்மூலம் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியான சாதுர்யம் இல்லை என்று பாராளுமன்றத்திற்கு வெளியே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த குருதாஸ் குப்தா கூறினார். இந்த ஊழல் குற்றச்சாட்டில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபடிக்க மத்திய அரசு தனது கடமையில் இருந்து தவறிவிட்டது என்றும் குருதாஸ் குப்தா கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago