முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ஜி ஏலம் - ஆகஸ்ட் 31 வரை கெடு நீட்டிப்பு

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 26 - 2 ஜி அலைக்கற்றை ஏலம் விடுவதற்கு ஜூன் 2 ம் தேதி வரை விதிக்கப்பட்ட காலக்கெடுவை ஆகஸ்ட் 31 ம் தேதி வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவில் ஏலம் நடத்த குறைந்தபட்சம் 400 நாள்கள் தேவைப்படும் என்று கோரப்பட்டிருந்தது. அதை கோர்ட் நிராகரித்தது. நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது 2 ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் சேவையை செப்டம்பர் 7 ம் தேதி வரை தொடரலாம் என்றும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்ட குறிப்புகளில் சிலவற்றை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொண்டது. அந்த வகையில் அலைக்கற்றை ஏலம் நடத்த ஜூன் 2 ம் தேதி வரை விதிக்கப்பட்ட காலக்கெடு ஆகஸ்ட் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. எனினும் ஜூன் 2 ம் தேதிக்குள் அலைக்கற்றையை ஏலம் விடுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் மத்திய அரசு முடித்து விட வேண்டும். அதற்கு வசதியாக இப்போது 2 ஜி உரிமம் பெற்றுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவையை செப்டம்பர் 7 ம் தேதி வரை தொடர அனுமதி அளிக்கிறோம் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். 

தீர்ப்பை தொடர்ந்து பேசிய அட்டர்னி ஜெனரல் ஏலம் நடத்துவதற்கான நடைமுறையை தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தொடங்கி விட்டது. ஆனால் நீதிமன்றம் விதித்துள்ள கெடுதான் போதாது என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து பேசிய நீதிபதிகள், 2 ஜி அலைக்கற்றை ஏலம் நடத்த குறைந்தபட்சம் 400 நாட்கள் ஒதுக்க வேண்டும் என்பது மத்திய அரசின் கோரிக்கை. ஆனால் 2008 ம் ஆண்டில் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு எவ்வளவு காலத்தை அரசு எடுத்துக் கொண்டது. அப்போதே இது போன்ற முயற்சியை எடுத்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்க தேவையில்லை என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் புதிய ஏலம் நடத்தப்படும் வரை 122 தொலைத் தொடர்பு உரிமங்களை ரத்து செய்து வழங்கிய தீர்ப்பு அமலில் இருக்கும் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago