முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் ஆக்கிரமிப்பு: மு.க.அழகிரி மீது போலீசில் புகார்

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.26 - மதுரையில் மாநகராட்சிக்கு சொந்தமான 8 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக மத்திய மந்திரி மு.க.அழகிரி மீது போலீசில் புகார் செய்யப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் மேயர் ராஜன்செல்லப்பா அறிவித்தார். மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன், ஆணையாளர் (பொறுப்பு) ஆறுமுகநயினார் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசும்படி மேற்கு மண்டல தலைவர் கே.ராஜபாண்டியனை மேயர் அழைத்தார். அப்போது திமுக கவுன்சிலர் எம்.எல்.ராஜ் எழுந்து எங்களைதான் முதலில் பேச அழைக்க வேண்டும் என்றார். இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. ராஜன்செல்லப்பா கூறும் திமுகவினருக்கு வரிசைஅடிப்படையில் பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்றார். இதனை ஏற்றுக்கொள்ளாத திமுக கவன்சிலர்கள் வாயில் கருப்புதுணியை கட்டிக்கொண்டு வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து மண்டல தலைவர் கே.ராஜபாண்டியன் பேசும்போது, மதுரையில் நல்ல மழை பெய்துள்ளது. சமீபகாலமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியும், குடிநீரில் சாக்கடை கலந்தும் வருகிறது. மழைநீர் தேங்குவதை மழை வடிகால்களை மராமத்து செய்ய வேண்டும்.

மேயர்- கடந்த திமுக நிர்வாகத்தில் மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் சரி செய்யப்பட்டு வருகிறது. இதை போலவே மழைநீர் வடிகால்களும் சரிசெய்யப்படும்

தெற்கு மண்டல தலைவர் பெ.சாலைமுத்து -வைகை அணையில் தற்போது 46 அடியும், பெரியாறு அணையில் 119 அடியும் தண்ணீர் உள்ளது.கோடைகாலமாக இருப்பதால் மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். மேலும் விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி பகுதிகளுக்கும் லாரி மூலம் அதிக அளவில் தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டல பகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் மேயர் திட்டங்களை பார்வையிட வந்தாலோ அல்லது மாநகராட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ மண்டல தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

மேயர் - நான் மண்டல தலைவர்களின் அதிகாரங்களில் தலையிடுவது இல்லை. மற்ற மண்டல தலைவர்கள் இது போன்று குறை கூறியதும் இல்லை. நீங்கள்(சாலைமுத்து) மட்டும்தான் கூறுகிறீர்கள். மாநகராட்சி திட்டம் மற்றும் பணிகளை பார்வையிட வந்திருப்போம். அதற்காக உங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் வந்ததாக கூறுவது தவறு.

பெ.சாலைமுத்து - மதுரை மாட்டுத்தாவணி சம்பக்குளத்தில் சுடுகாடு முதலில் வந்ததா? இல்லை தயா சைபர் பார்க் முதலில் வந்ததா?

நகரமைப்பு அதிகாரி- சுடுகாடுதான் முதலில் வந்தது.

சாலைமுத்து- அப்படியென்றால் தயா சைபர் பார்க் கட்ட அனுமதி வழங்கியது எப்படி? அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான 8 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் மாநகராட்சியின் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. எந்த தனிநபரும் மாநகராட்சியின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதை மாநகராட்சி இடித்து தள்ளி தன்வசம் ஆக்கி கொள்ளும். மு.க.அழகிரியின் சைபர் பார்க்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை இன்னும் இடிக்காதது ஏன்? மாநகராட்சி இடத்தை மு.க.அழகிரி திட்டம் போட்டு  அபகரித்துள்ளார். இது நில அபகரிப்பா இல்லையா?

ஆணையாளர்- இது நில அபகரிப்பு தான்.

மேயர் -நில அபகரிப்பு என்றால் மாநகராட்சி மூலம் போலீசில் மத்திய மந்திரி அழகிரி மீது புகார் செய்யப்படும் என்றார். இதை கேட்டதும் அதிமுக கவுன்சிலர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

வடக்கு மண்டல தலைவர் ஜெயவேல்- வடக்கு மண்டலத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். கவுன்சிலர்கள் மக்ககளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள மாநகராட்சி சார்பில்செல்போன் தரவேண்டும்.

மேயர்- அனைத்து கவுன்சிலர்களுக்கும் செல்போன் வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.

 

மதுரை மாநகராட்சிக்கு  250 கோடி நிதி முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

 

மதுரை மாநகராட்சி கூட்டம் நேற்று துவங்கியதும் மேயர் ராஜன்செல்லப்பா முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து வாசித்தார். அதில் கூறியிருந்ததாவது, மதுரை மாநகராட்சி தோன்றிய காலம் தொட்டு மாநகராட்சி வரலாற்றிலேயே இது வரை இல்லாத அளவிற்கு வளர்ச்சி திட்டங்களுக்காக முதலமைச்சர் அம்மா மதுரை மாநகராட்சிக்கு ரூ.250 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இது மக்களை குளிர வைத்துள்ளது. முதல்வர் அம்மாவிற்கு மாமன்றத்தின் சார்பிலும், மதுரை மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தொலைநோக்கு திட்டமான 2023ஐ கொண்டுவந்து தமிழக மக்கள் பல் வளமும் பெற்று  பார் போற்றி வாழ்ந்திட வழி செய்துள்ளார். முதல்வர் அம்மாவிற்கு கோடானு கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago