முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் கொள்முதலிலும் ஊழலா? அந்தோணி பதில்

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.26 - மிகவும் முக்கிய பிரமுகர்களுக்காக 12 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டதில் ரூ.350 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விரைவில் தீவிர விசாரணைக்கு கேட்டுக்கொள்வேன் என்று ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் எல்லா துறைகளிலும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது. ராணுவத்திற்கு ஆயுதம் வாங்க ரூ. பல கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங் குற்றஞ்சாட்டி உள்ளார். தற்போது இந்தியாவில் உள்ள மிகவும் முக்கியப் பிரமுகர்களுக்காக வெளிநாட்டில் உள்ள அகஸ்தா வெஸ்ட்லேண்ட் என்ற கம்பெனியிடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் சுவிட்ர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தரகருக்கு ரூ. 350 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தற்போது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நேற்று ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அந்தோணி, 12 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்துள்ளதாம். அதை நான் இன்னும் படித்து பார்க்கவில்லை. இருந்தபோதிலும் இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விரைவில் தீவிர விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொள்வேன் என்றார். இதற்கு முன் இதே செய்தி வெளியான போது உடனே நான் விசாரணை நடத்தும்படி ராணுவ செயலாளருக்கு உத்தரவிட்டேன். மேலும் இத்தாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிக்கு கடிதமும் எழுதினேன். அவரிடம் இருந்து இது தொடர்பாக ஒரு விளக்கமான அறிக்கையையும் பெற்றேன் என்றும் அந்தோணி கூறினார். இதுகுறித்து இத்தாலியும் விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஏதாவது தவறுதல் நடந்திருந்தால் நான் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் அந்தோணி மேலும் கூறினார். ஹெலிகாப்டர் கம்பெனி இத்தாலியில் உள்ளது. போபர்ஸ் பீரங்கி ஊழலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் குவாத்ரோச்சியும் இத்தாலி நாட்டுக்காரர்தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்