முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ஜி வழக்கு: சுவாமியிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 26 ​- 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை சேர்க்க கோரும் சுவாமியின் மேல்முறையீட்டு மனைவை சுப்ரீம் கோர்ட் விசாரித்தது. அப்போது சுவாமியின் கோரிக்கையை ஏற்கனவே சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கில் தீர்ப்பில் அவருக்கு இருக்கும் ஆட்சேபத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கும் படி சுவாமிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ப. சிதம்பரத்துக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கும் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சமமான பங்களிப்பு உள்ளது. இதை நிரூபிக்கும் ஏராளமான அதிகாரபூர்வ கடிதங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சிதம்பரத்துக்கு, ராசா 2008 ஜூலை 7 ம் தேதியிட்டு எழுதிய கடிதத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்றிருந்தேன். அதை நீதிபதிகளின் உத்தரவின்படி நீதிமன்ற பதிவாளரிடம் அத்தாட்சி பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன். தேச பாதுகாப்பு தொடர்புடைய கண்ணோட்டத்தில் சி.பி.ஐ. இந்த விவகாரத்தை விசாரிக்கவில்லை. சர்ச்சைக்குரிய நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம் கிடைப்பதால் ஏற்படும் விபரீத பலன்களை அப்போதைய நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் நன்றாகவே அறிந்திருந்தார் என்று சுவாமி வாதாடினார். 

இதையடுத்து பேசிய நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன், தேச பாதுகாப்பு விவகாரம், மத்திய அமைச்சர்களிடையே நடைபெற்ற கடித பரிமாற்றங்கள் போன்றவை சிதம்பரத்தை வழக்கில் சேர்க்க எந்த வகையில் காரணமாக இருக்கும். சுவாமியின் மனு சிதம்பரத்துக்கு எதிரானது என்றால் அதை வலியுறுத்தும் வகையில் கூறப்படும் காரணங்கள் என்ன? அடிப்படையில் அவரது மனு தொடர்பாக சி.பி.ஐ. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அவர் காணும் ஆட்சேபம் என்ன என்று கேட்டார். இதற்கு பதிலளிக்க தனக்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் அவகாசம் தேவை என்று சுவாமி கோரினார். அதை ஏற்று அனுமதி அளித்த நீதிபதிகள், சுவாமியின் மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்