முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்வி குறித்து விசாரணை நடத்தக்கோரும் மனு தள்ளுபடி

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.26 - காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியையும் ஒரு பெண் வழக்கறிஞரையும் தொடர்புபடுத்தி வெளியாகியுள்ள ஒரு சி.டி. சர்ச்சை குறித்து விசாரணை நடத்தக்கோரிய மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. 

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியையும் டெல்லி ஐகோர்ட்டு பெண் வக்கீல் ஒருவரையும் தொடர்புபடுத்தி ஒரு சி.டி. வெளியாகியுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் சஞ்சய்குமார் என்ற சமூக சேவகர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த சி.டி. சர்ச்சை குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த பெண் வழக்கறிஞர் மீது டெல்லி ஐகோர்ட்டு வழக்கறிஞர்களின் சங்கம் டெல்லி பார் கவுன்சில் ஆகியவை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் அந்த மனுவில் கேட்டுக்கொண்டார். டெல்லி ஐகோர்ட்டில் என்னதான் நடக்கிறது என்று தெருவில் போவோர் வருவோர் எல்லாம் பேசிக்கொள்கிறார்கள். எனவே டெல்லி ஐகோர்ட்டு வக்கீல்கள் சமுதாயத்தின் பெயரை காப்பாற்ற இந்த சர்ச்சை குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தனது மனுவில் கேட்டிருந்தார். இந்த மனு மீது டெல்லி ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான டிவிசன் பெஞ்ச் விசாரணை நடத்தியது. 

ஒரு வழக்கறிஞரின் ஊழியராக உள்ள அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் சங்க அமைப்புகளுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றுகூறி மனுதாரரின் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்