முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் 15 ஆண்டு சிறைக்கு பின் இந்தியருக்கு மன்னிப்பு

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

துபாய்.ஏப்.27 - துபாயில் கொள்ளை, கடத்தல் போன்ற குற்றங்கள் செய்த இந்தியருக்கு 15 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் அந்த நாட்டு அரசு மன்னிப்பு வழங்கியுள்ளது. இந்தியர் அனில் சம்சுதீன் என்பவர் துபாயில் வசித்தார். இவர் கடந்த 1998-ம் ஆண்டு துபாயில் வசித்த மற்றொரு இந்தியரின் வீட்டை திறந்து உள்ளே போய் அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி 2 ஆயிரத்து 300 தினாவை திருடினர். அதோடுமட்டுமல்லாது வீட்டில் இருந்தவர்களை ஒரு குளியலறையில் தள்ளி பூட்டிவிட்டு அங்கிருந்த 7 வயது சிறுவனை கடத்திக்கொண்டு சென்றுவிட்டார். பின்னர் அந்த சிறுவனை மீட்க பெற்றோர்கள் போலீசார் மூலம் முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போது சிறுவனை விடுவிக்க வேண்டும் என்றார் ஒரு மில்லியன் தினா தரவேண்டும் என்று அனில் கோரிக்கை வைத்தான். ஷார்ஜா விமான நிலையத்திற்கு தொகையை கொண்டு வந்தால் அங்கு அதை பெற்றுக்கொண்டு சிறுவனை விடுப்பதாக அனில் கூறினான். அதனையொட்டி ஷார்ஜா விமான நிலையத்திற்கு போலீசார் முன்கூட்டியே சென்றுவிட்டனர். சிறுவனின் பெற்றோர் தொகையை கொடுக்க அனிலிடம் சென்றனர். அப்போது அனிலை துபாய் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். துபாயில் உள்ள உள்ளூர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் அனிலுக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி அனில் 15 ஆண்டுகள் 9 மாதங்கள் வரை சிறையில் இருந்துவிட்டார். அந்த நாட்டு சட்டப்படி ஆயுள்தண்டனை பெற்றவர் 15 ஆண்டுகள் முழுமையாக சிறைவாசம் இருந்தால் சிறப்பு மனு தாக்கல் செய்து மன்னிப்பு கோரலாம். அதன்படி அனில் பொதுமன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு அனிலுக்கு மன்னிப்பு வழங்கியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்