முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பென்னி நினைவு மண்டபம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 27 - முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் பென்னிகுயிக்குக்கு அவருடைய உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கும் பணிக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 

தேனி - குமுளி நெடுஞ்சாலையில் லோயர்கேம்ப்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகப் பகுதியில் ரூ. 1.25 கோடி செலவில் இந்த நினைவு மண்டபம் அமையவிருக்கிறது. தலைமை செயலகத்தில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் நினைவு மண்டபத்துக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

முல்லைப் பெரியாறு அணையின் காரணமாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தென் தமிழக மாவட்டங்கள் மாநில மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் முல்லை ஆறு மற்றும் பெரியாறு என்ற ஆறுகளாக மேற்குப்புறமாக கேரள மாநிலத்தில் ஓடி அரபிக் கடலில் வீணாக சென்று கலப்பதை கிழக்குப்புறமாக திருப்பி விடுவதன் மூலம் வைகை நதி நீரை மட்டுமே நம்பியுள்ள பல லட்சக்கணக்கான ஏக்கர் வறண்ட நிலங்கள் விளை நிலங்களாக மாறும் என கர்னல் ஜான் பென்னிகுயிக் திட்டமிட்டார். 

அவர் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ராணுவ பொறியாளராக இந்தியாவுக்கு வந்தவர். பல்வேறு இன்னல்களையும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளில் அணை பாதி கட்டப்பட்டு கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் உருவான வெள்ளத்தால் கட்டுமான பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ஆங்கிலேய அரசின் நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கும் கிடைக்கவில்லை. இதனால் பிரிட்டனில் உள்ள தனது சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு முல்லைப் பெரியாறு அணையை 1895 ல் கட்டி முடித்தார். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. 

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் இந்த மாபெரும் பணியை நிறைவு செய்த அவரது நினைவாக லோயர்கேம்ப்பில் அமைக்கப்படவுள்ள நினைவு மண்டபம் அலங்கார நுழைவு வாயில், அலங்கார தேக்கு மரக்கதவுகள், வெண்கல வார்ப்பு எழுத்துக்கள் கொண்ட பெயர்ப் பலகைகள் ஆகியவற்றுடன் எழில்மிகு தோற்றத்துடன் மக்கள் கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago