முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர் நீதிமன்றத்திற்கு கோடைகால விடுமுறை

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.27 - சென்னை உயர்நீதிமன்றத்தில் கோடைகால விடுமுறை காலத்தில் எந்த நாட்களில் விசாரணை நடைபெறும் என்றும் வழக்கை எந்தெந்த நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்பதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை உயர்நீதிமன்றம் மே 1 ந்தேதியில் இருந்து ஜூன் 3 ந்தேதி வரை கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் நீதிமன்றம் நடப்பதற்காக விடுமுறை காலம் 3 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. மே 1 முதல் மே 13 வரை முதல் பகுதி, மே 14 முதல் மே 27 வரை இரண்டாம் பகுதி, மே-28 முதல் ஜூன் 3 வரை மூன்றாம் பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி நீதிபதிகளாக நீதிபதி சி.எஸ்.கர்ணன் மற்றும் நீதிபதி கே.ரவிசந்திரபாபு மற்றும் நீதிபதி பி.தேவதாஸ் அனைத்து டிவிஷன் பெஞ்ச் விவகாரங்களைக் கவனிப்பார், இரண்டாம் பகுதி நீதிபதிகளாக, நீதிபதி வி.தனபாலன் மற்றும் நீதிபதி பி.ராஜேந்திரன், நீதிபதி டி.மதிவாணன், மூன்றாம் பகுதி நீதிபதிகளாக நீதிபதி. வெங்கடராமன் மற்றும் நீதிபதி சி.எஸ். கர்ணன் நீதிபதி, அருணா ஜெகதீசன் ஆகியோர் இருப்பார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்