முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தப்பட் பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. விடுதலை

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

 

புவனேஷ்வரம். ஏப். 27 - மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட ஒடிசா மாநில பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிக்காக்கா நேற்று விடுதலை செய்யப்பட்டார். ஒடிசா மாநிலம் லக்ஸ்மிபூர் தொகுதி பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிக்காக்காவை கடந்த மார்ச் மாதம் 23 ம் தேதி மாவோயிஸ்டு தீவிரவாதிகல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

இதனால் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரரபப்பு ஏற்பட்டது.  எம்.எல்.ஏ.வையே கடத்தி சென்றது ஒடிசா மாநில சட்டசபையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.எல்.ஏ.வுக்கே இந்த கதியா என்று சக எம்.எல்.ஏ.க்கள் குமுறினர்.

கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வை மீட்க ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால் மாவோயிஸ்டுகளின் சில முக்கியமான கோரிக்கைகளை அவரால் நிறைவேற்ற முடியவளில்லை.

எம்.எல்.ஏ. எப்போது மீட்கப்படுவார் என்பது தினம்தினம் கேள்விக்குறியாகவும் சஸ்பென்சாகவும் இருந்தது.

இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் ஒரு நிபந்தனையுடன் ஜினா ஹிக்காக்காவை விடுதலை செய்வதாக முன் கூட்டியே அறிவித்தனர்.

எம்.எல்.ஏ. பதவியை ஹிக்காக்கா ராஜினாமா செய்ய வேண்டும் , மலை வாழ் மக்களுக்கு கடந்த 3 வருடங்களாக பிஜூ ஜனதா தளம் அரசு எந்த நண்மைகளையும் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். முதல்வர் நவீன் பட்நாயக் லச்சுமிபூர் தொகுதி மக்களுக்கு வளவ்ச்சி திட்டங்களை செயல்படுத்தவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஹிக்காக்கா விடுதலை செய்யப்பட்டார்.

கோராபுட் மாவட்டம் நாராயண்பட்டினதத்திற்கு அருகேயுள்ள பாலிபேட்டா என்ற கிராமத்திற்கு நேற்று காலை 10.30 மணிக்கு மாவோயிஸ்டுகலால் விடுதலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ஹிக்காக்கா வந்து சேர்ந்தார்.

அப்போது அங்கே அவரது மனைவி கவுசல்யா மற்றும் திரளான கிராம மக்கள் திரண்டு வந்து பலத்த ஆரவாரத்துடன் எம்.எல்.ஏ.வை வரவேற்றனர்.

அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியேடு காணப்பட்டனர்.

ஹிக்காக்காவின் வக்கீல் என்.ஆர்.பட்நாயக்கும் அந்த கிராமத்தில் எம்.எல்.ஏ.வை வரவேற்றார்.

எம்.எல்.ஏ.விடுதலையை ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது.  விடுதலையாகி வந்த ஹிக்காக்கா மிகவும்  மகிழ்ச்சியாவும் புன்சிரிப்போடும் காணப்பட்டார்.

 தனது வக்கீலுடன் கைகுலுக்கியபடி செய்தியாளர்களுக்கு ஹிக்காக்கா பேட்டியளித்தார்.

ஹிக்காக்கா விடுதலை செய்யப்படுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்ட ஏராளமான பத்திரிகையாளரள் மற்றும் புகைப்படக்காரர்கள்,  தொலைக்காட்சி செய்தியாளர்கள் வீடியோகிராபர்கள் அந்த கிராமத்தில் முன்கூட்டிய திரண்டு வந்து காத்திருந்தனர்.

தான் எந்த இடத்தில் கடத்தி வைக்கப்பட்டிருந்தோம் என்பதை தன்னால் சரியாக கணிக்க முடியவில்லை என்றுஹிக்காக்கா கூறினார்.

தன்னை ஓரிடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு  மாவோயிஸ்டுகள் மாற்றிக்கொண்டே இருந்தனர் என்றும் அவர் கூறினார்.

ஹிக்காக்காவின் விடுதலையை தொடர்ந்து அந்த பகுதிக்கு போலீசாரையோ உளவு படையினரையோ அனுப்பி வைக்ககூடாது என்று ஒடிசா மாநில அரசுக்கு மாவோயிஸ்டு தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி அந்த காட்டுப்பகுதிக்கு யாரும் அனுப்பி வைக்கப்படவில்லை.

 கடத்தி செல்லப்பட்ட எம்.எல்.ஏ.விடுதலை  செய்யப்பட்டதை அடுத்து லட்சிமிபூர் தொகுதி மக்கள் பெரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்