முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை தேர்தல்: 43 பேர் கொண்ட அ.தி.மு.க பணிக்குழு

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.28 - புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பணியாற்ற அமைச்சர்கள் உட்பட 43 பெர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதில் 32 பேர் அமைச்சர்கள். புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்துக்குமரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து இத்தொகுதிக்கு ஜூன் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக கார்த்திக் தொண்டமானை முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் நேற்று முதல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார். ஏற்கெனவே போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது.

இதனிடையே புதுக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தலில் பணியாற்றுவதற்கு அமைச்சர்கள் உள்ளிட்ட 43 பேர் கொண்ட குழுவை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  

நிதி அமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் முதல் அமைச்சரான எம்.எஸ்.எம். ஆனந்தன் வரை அத்தனை பேரையும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

கடந்த சங்கரன்கோவில் இடைத் தேர்தலிலும் கூட இப்படித்தான் அத்தனை அமைச்சர்களையும் களம் இறக்கி மற்ற கட்சிகளை மிரள வைத்தார் ஜெயலலிதா. தற்போதும் அதே பாணியில் அத்தனை அமைச்சர்களும் புதுக்கோட்டைக்குப் புறப்படுகிறார்கள்.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மற்ற கட்சிகள் போட்டியிடுவதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டாத நிலையில் அதிமுக முழு வீச்சில் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்கான அதிமுக பணிக்குழு குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

12.6.12 அன்று நடைபெறவுள்ள புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில்,  தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக,

ஓ. பன்னீர்செல்வம் கழகப் பொருளாளர் - நிதித்துறை அமைச்சர், கே.ஏ. செங்கோட்டையன் கழக தலைமை நிலையச் செயலாளர் - வருவாய்த் துறை அமைச்சர்,   நத்தம் இரா. விசுவநாதன் திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர்,  கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளாட்சித் துறை அமைச்சர்,  ஆர். வைத்திலிங்கம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், பா.வளர்மதி கழக அமைப்புச் செயலாளர் சமூக நலத் துறை அமைச்சர்,   பி. பழனியப்பன் உயர் கல்வித் துறை அமைச்சர்,    சி.வி. சண்முகம் விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் வணிகவரி, பத்திரப் பதிவுத்துறை, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சர்,   செ. தாமோதரன் கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் வேளாண்மைத் துறை அமைச்சர்,    செல்லூர் கே. ராஜூ மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கூட்டுறவுத்துறை அமைச்சர்,  பச்சைமால் கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலாளர் வனத்துறை அமைச்சர்,  எடப்பாடி கே.பழனிசாமி சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்,    ஆர். காமராஜ் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் உணவுத் துறை அமைச்சர், வி. மூர்த்தி திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்,   எம்.சி. சம்பத் கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஊரகத் தொழில் மற்றும் மதிய சத்துணவுத் திட்ட அமைச்சர்,  கே.வி. ராமலிங்கம் ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொதுப்பணித் துறை அமைச்சர்,   சின்னையா காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்,   பி. தங்கமணி நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் தொழில் துறை அமைச்சர்,   டாக்டர் எஸ். சுந்தரராஜ் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்,    பி. செந்தூர்பாண்டியன் அவர்கள் திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர்,  எஸ். கோகுல இந்திரா கழக மகளிர் அணிச் செயலாளர் சுற்றுலாத் துறை அமைச்சர்,   ரமணா திருவள்ளூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சுற்றுச் சூழல் துறை அமைச்சர்,   சுப்பிரமணியன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்  வி. செந்தில்பாலாஜி கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் போக்குவரத்துத்துறை அமைச்சர்,   கே.ஏ. ஜெயபால் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர் மீனளத் துறை அமைச்சர்,   என்.ஆர். சிவபதி திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்,    முக்கூர் என். சுப்பிரமணியன் திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்,   சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்,   டாக்டர் வி.எஸ். விஜய் வேலூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்,    அ.முஹம்மத்ஜான்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்,   ஆனந்தன் திருப்ர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்,   டாக்டர் பி.எச். பாண்டியன் கழக அமைப்புச் செயலாளர்,   அ. தமிழ்மகன் உசேன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், எம்.எல்.ஏ., கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்,   அன்பழகன் ஜெயலலிதா பேரவைச் செயலாளர்,   ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர்,    உதயகுமார், எம்.எல்.ஏ., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்,   எஸ். சரவணபெருமாள் கழக மாணவர் அணிச் செயலாளர்,   அ. அன்வர்ராஜா கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்,  டாக்டர் வைகைச்செல்வன், எம்.எல்.ஏ.,  கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்,   கு.ப. கிருஷ்ணன், எம்.எல்.ஏ., ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி,   ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் முன்னாள் அமைச்சர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்