முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்புமணி ராமதாஸ் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, ஏப்.28 - ஊழல் வழக்கு ஒன்றில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது டெல்லி கோர்ட்டில் சி.பி.ஐ. நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு செப்டம்பர் 28 ம் தேதி அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், நாக்பூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு சேர்க்கை அனுமதி வழங்கியுள்ளார். இந்த கல்லூரியில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் இந்த கல்லூரிக்கு சேர்க்கை அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஆட்சேபனை தெரிவித்தது. அந்த ஆட்சேபனையையும் மீறி அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த கல்லூரிக்கு சேர்க்கை அனுமதி வழங்கியுள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ. நேற்று பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அன்புமணி ராமதாஸ், 2 மூத்த மருத்துவர்கள் ஆகியோர் உட்பட மொத்தம் 10 பேர் மீது இந்த குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி அன்புமணி ராமதாஸ் ஊழல் செய்துள்ளதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்