முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த மாதம் வருகை

சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.28 - அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் அடுத்த மாதம் 7 ம் தேதி இந்தியா வருகிறார். அமெரிக்கா-சீனா இடையிலான உறவை மேம்படுத்த அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் அடுத்த மாதம் 3 ஆம் தேதி சீனா வருகிறார். அங்கு அவர் இரு நாடுகளுக்கும் இடையேயான 4 வது சுற்று பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறார். இரண்டு நாட்கள் சீனாவில் தங்கும் ஹிலாரி, அதன்பிறகு வங்கதேசம் வர உள்ளார். வங்கதேச பயணத்திற்கு பிறகு அவர் மே மாதம் 7 ம் தேதி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார். பிறகு அம்மாநில கவர்னர் எம்.கே.நாராயணனுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மறுநாள் 8 ம் தேதி டெல்லி செல்லும் ஹிலாரி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசுகிறார். பிறகு பிரதமர் மன்மோகன்சிங்கையும் ஹிலாரி சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதேநாளில் சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி சண்முகம் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony