முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் இருந்து பின்லேடன் மனைவிகள் வெளியேற்றம்

சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஏப். 28 - பாகிஸ்தானில் இருந்து பின்லேடன் மனைவிகள் வெளியேற்றப்படவுள்ளனர்.  அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன் கடந்த ஆண்டு மே மாதம் 2 ம் தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருடன் 3 மனைவிகள், 11 குழந்தைகள் இருந்தனர். பின்லேடன் கொல்லப்பட்டவுடன் பாகிஸ்தான் அரசு அவர்களை கைது செய்தது. சட்டவிரோதமாக பாகிஸ்தானில் தங்கியிருந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பின்லேடன் மனைவிகளும், குழந்தைகளும் இஸ்லாமாபாத்தில் ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் அனைவரையும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றும் படி கோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற பாகிஸ்தான் அரசு ஏற்பாடுகளை செய்தது. அதன்படி பின்லேடனின் 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகளும் சவுதி அரேபியாவுக்கு செல்கின்றனர். அவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்து மினி பஸ் மூலம் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்படுகின்றனர். பின்லேடனின் 2 மனைவிகள் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள். கடைசி மனைவி அமன் மட்டும் ஏமனை சேர்ந்தவர். சவுதி அரேபியா செல்லும் இவர் அங்கிருந்து தனது 4 குழந்தைகளுடன் ஏமன் செல்லவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago