முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொகாலி கிரிக்கெட் போட்டியை பார்க்க பாக். பிரதமர் வருகிறார்

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,மார்ச்.- 28 - பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பை ஏற்று மொகாலியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்க்க பாகிஸ்தான் பிரதமர் கிலானி வருகிறார். இந்தியாவில் உலக கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று ஆமதாபாத்தில் காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதனையடுத்து அரை இறுதி போட்டி வருகின்ற புதன்கிழமை அன்று மொகாலியில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டியை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன்  இருக்கிறார்கள். ரூ. 1000, 2000 கொடுத்தாலும் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் அலைமோதிக்கொண்டியிருக்கிறார்கள். இந்தநிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே எத்தனை பிரச்சினை இருந்தாலும் அதை மறந்துவிட்டு மொகாலி கிரிக்கெட் போட்டியை பார்க்க வரும்படி பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி மற்றும் பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பெருந்தன்மையுடன் அழைப்பு விடுத்தார். 

இந்த அழைப்பை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து நேற்றுமுன்தினம் இரவு சர்தாரியும் கிலானியும் இஸ்லாமாபாத்தில் சுமார் 2 மணிநேரம் விரிவான முறையில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிவில்,மொகாலி கரிக்கெட் போட்டியை பார்க்க செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் பிரதமர் கிலானி மட்டும் கிரிக்கெட் போட்டியை பார்க்க மொகாலிக்கு வருகிறார். இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜனாதிபதி ஜர்தாரி செய்திதொடர்பாளர் பர்ஹத்துல்லா பாபர் கூறுகையில் அதிபர் ஜர்தாரி மற்றும் பிரதமர் கிலானி ஆகியோர் சந்தித்த பின்பு, பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பை ஏற்று கிரிக்கெட் போட்டியை பார்க்க கிலானி மொகாலி செல்கிறார் என்று தெரிவித்தார். ஜர்தாரி, மற்றும் கிலானிக்கு பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அழைப்பை அவர்கள் இருவரும் ஏற்கனவே வரவேற்றுள்ளனர் என்றும் பாபர் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago