முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் அணு மின் நிலையத்தில் அதிகபட்சமான அணுக்கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளது

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, மார்ச் - 28 - ஜப்பான் நாட்டில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அணு மின் நிலையத்தில் இருந்து அதிகபட்சமான அணுக்கதிர்வீச்சு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டில் கடந்த 11-ம் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மிகப்பெரிய சுனாமியும் தாக்கியது.  இதில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

பூகம்பத்தினால் டோக்கியோவிலிருந்து 240கி.மீ.தொலைவில் உள்ள புக்குசிமா  அணுமின்சார நிலையமும் பாதிக்கப்பட்டது.  இந்த மின் நிலையத்தில்  உள்ள 6 அணு மின் உலைகளில் 4 உலைகள் பலத்த சேதம் அடைந்தன. 

இந்த 4 உலைகளிலும் வெடிவிபத்துக்கள் ஏற்பட்டதோடு தீ விபத்துக்களும் ஏற்பட்டன.

இதனால் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டது. 

இந்த கதிர் வீச்சை தடுக்க அணு உலைகள் மீது கடல் நீரை பீய்ச்சி குளிர்விக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

என்றாலும் கதிர்வீச்சின் அளவு அதிகபட்சமாக அதிகரித்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அணுமின் நிலையத்தின் 2-வது அணு மின் உலையில் வழக்கத்தை விட 10 மடங்கு கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளதாக இந்தஅணு மின் நிலையத்தை நிர்வகித்து வரும் டோக்கியோ பவர் கம்பெனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால்  இந்த மின் நிலையத்தை சற்றியுள்ள பகுதிகளில் மேலும் பல கி.மீ. சுற்றளவுக்கு மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்