முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் விளையாட்டில் ஊழல் 44 நடவடிக்கைகள் குறித்து விசாரணை

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.- 28 - காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடர்பான 44 நடவடிக்கைகள் குறித்து மத்திய லஞ்சம் ஒழிப்பு ஆணையம் விசாரணையை மேற்கொண்டுள்ளது.  கடந்த அக்டோபர் மாதம் புதுடெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியை நடத்துவதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ.யும் மத்திய லஞ்சம் ஒழிப்பு ஆணையமும் விசாரணை செய்து வருகிறது. விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு கட்டுமானப் பணிகள், தேவையான விளையாட்டு சாமான்கள் மற்றும் இதர பொருட்களை அரசு ஏஜன்சிகள் கொள்முதல் செய்தது உள்பட 44 நடவடிக்கைகள் குறித்து மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணையை மேற்கொண்டுள்ளது. 

வி.ஐ.பி, அனுமதி சீட்டுகள் கொடுப்பது, தட்டுமுட்டு சாமான்கள் சப்ளை, விளையாட்டு கிராமத்திற்கு கருவிகள், மற்றும் உட்டன் சில்கள் வாங்கியதில் நிதியை மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு ஊழியர்கள் தவறுதலாக பயன்படுத்தியது,புரோக்கர்கள் நியமனத்தில் பாரபட்சம் ஆகியவைகள் குறித்தும் லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரித்து வருகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டி கமிட்டி  தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுரேஷ் கல்மாடி மற்றும் அவரது உதவியாளர்களிடம் விசாரணை நடந்தது. அவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் பலமுறை சோதனை நடத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்