முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் இன்று புறப்பாடு

புதன்கிழமை, 2 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, மே. - 2 - மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவையொட்டி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் இன்று மாலை அழகர்கோவிலில் இருந்து தோளுக்கினியனாக புறப்பாடாகிறார்.  மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் சித்திரை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சைவ, வைணவ சமயத்தவர்களை ஒருங்கிணைக்கும் விழாவாக இந்த விழாவை மன்னர் திருமலை நாயக்கர் மாற்றினார். இதில் பங்கேற்க சுந்தரராஜ பெருமாள் அழகர்கோவில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு திருக்கல்யாண மண்டபத்துக்கு இன்று மாலை 6 மணிக்கு எழுந்தருள்கிறார். பின்னர் அன்றைய தினம் 7 மணியளவில் மீண்டும் மூலஸ்தானத்துக்கு திரும்புகிறார். நாளை மறுநாள் வியாழன்றும் இதே போல் மாலையில் புறப்பாடாகி திரும்புகிறார் பெருமாள். வெள்ளிக் கிழமை காலை 11 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்துக்கு தோளுக்கிணியனாக எழுந்தருளும் பெருமாள் பின்னர் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து மாலை 7 மணியளவில் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார். வழிநெடுகிலும் உள்ள திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளும் பெருமாள், 6 ம் தேதி காலை 5.45 மணியில் இருந்து 6.35 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். இத்திருவிழாவையொட்டி கிராமங்களில் பக்தர்கள் சித்திரை முதல் நாளில் இருந்தே விரதம் மேற்கொண்டுள்ளனர். கிராமக் கோவில் வீடுகளில் பக்தர்கள் நேற்று முதல் சாமி ஆட்டம் தொடங்கி தீப்பந்த திரி சுற்றுதல், தண்ணீர் பீய்ச்சி கள்ளழகரை வரவேற்பதற்கான வழிபாடுகளை தொடங்கியுள்ளனர். கிராமங்களில் தற்போது பெரும்பாலும் மாட்டு வண்டிகள் உபயோகத்தில் இல்லை. இதனால் டிராக்டர், மினி லாரிகளில் பக்தர்கள் மதுரைக்கு வருகை தருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்