முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆளில்லா விமான தாக்குதல் நடத்தகூடாது என சட்டமேதுமில்லை

வியாழக்கிழமை, 3 மே 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், மே. - 3 - ஆளில்லாத விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தக் கூடாது என்று எந்த சட்டமும் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.  அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் இத்தகைய தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் கவலை தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் இது போன்ற நடவடிக்கைகளால் அப்பாவி பொதுமக்கள் பலரும் கொல்லப்படுகின்றனர் என்றும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது.  இந்த நிலையில் தனது தாக்குதல் முறையில் தவறு ஏதுமில்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனால் பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலும், பிற இடங்களிலும் ஆளில்லா விமான தாக்குதல் தொடரும் என்பதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான ஆலோசகர் ஜான் பெர்னென் பேசும் போது,  கொடூரமான பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது சரியான நடவடிக்கைதான். அமெரிக்காவுக்கு எதிராக பயங்கர ஆயுதங்களுடன் போர் நடத்தும் அல்கொய்தா, அமெரிக்க ராணுவ நிலைகளையும் குறி வைக்கிறது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆளில்லாத விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தக் கூடாது என்று எந்த சர்வதேச சட்டமும் இல்லை. பயங்கரவாதிகள் மூலம் எத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை வெளிப்படையாகவே தெரிவியுங்கள் என்று அதிபர் ஒபாமா ராணுவ அதிகாரிகளிடம் கூறி உள்ளார். எனவே இதனை விவரிப்பதில் எங்களுக்கு எவ்விதமான தயக்கமும் இல்லை என்றார். ஆள் இல்லாத விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவது குறித்து அமெரிக்கா இப்போதுதான் முதல் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்