முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்ஆப்பிரிக்- காவில் ஜனாதிபதிக்கு பிரதீபாக்கு வரவேற்பு

வியாழக்கிழமை, 3 மே 2012      உலகம்
Image Unavailable

பிரிட்டோரியா, மே. - 3 - ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தென் ஆப்பிரிக்கா வந்து சேர்ந்தார். அவர் தனது 9 நாள் வெளிநாட்டு பயணத்தின் இரண்டாம் கட்டமாக தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்தார். பிரதீபா வருகை மூலம் இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நெருக்கமான நட்புறவு மேலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  செஷல்ஸில் தனது 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு தென்னாப்பிரிக்கா வந்த அவரை விமான நிலையத்தில் அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் நகோனா மாஷபேனே வரவேற்றார். முன்னதாக, செஷல்ஸ் விமான நிலையத்தில் அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் மைக்கேல் மற்றும் அமைச்சர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர். தென்னாப்பிரிக்காவில் இருக்கும் பிரதீபா, அந்நாட்டு அதிபருடன் இரு தரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார். ஜனாதிபதியுடன் தொழிலதிபர்கள் குழு ஒன்றும் வந்துள்ளது. இந்திய, தென்னாப்பிரிக்க வர்த்தக கூட்டத்தில் இந்த குழு பங்கேற்கும். தென்னாப்பிரிக்காவில் உள்ள மகாத்மா காந்தி தொடர்புடைய இடங்கள் குறிப்பாக முதல் வகுப்பு ரயில் பெட்டியில் இருந்து மகாத்மா காந்தி தூக்கியெறியப்பட்ட பீட்டர்மார்ட்ஸ்பர்க் ரயில் நிலையம் ஆகியவற்றை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சென்று பார்ப்பார். மேலும் தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்திப்பார். அரசியலமைப்பு சட்ட அரங்கில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை அவர் திறந்து வைப்பார். டர்பன் நகரில் உள்ள காந்தி சிலைக்கு அவர் மலர்தூவி அஞ்சலி செலுத்துவார். மேலும் தென்னாப்பிரிக்க விடுதலைக்கு பாடுபட்ட நெல்சன் மண்டேலா சிறையிலடைக்கப்பட்டிருந்த ராமன் தீவுக்கு சென்று அங்குள்ள சிறை அறையை பார்வையிடுவார். ஜனாதிபதியுடன் மத்திய அமைச்சர் சச்சின் பைலட், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரபா தாசூர், சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே ஆகியோரும் வந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony