முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசைக் கவிழ்க்க வெளிநாடுகள் சதி: ராஜபக்சே புலம்பல்

வெள்ளிக்கிழமை, 4 மே 2012      உலகம்
Image Unavailable

கொழும்பு, மே.4 - உள்நாட்டு துரோகிகள் உதவியுடன் வெளிநாடுகள் தமது அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்வதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறி உள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: நாட்டில் கொழும்பு, யாழ்ப்பாணம், ஹட்டன், நுவரெலியா உட்பட அனைத்து இடங்களிலும் எந்த ஒரு பீதியும் இல்லாமலேயே மே தினக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதுதான் நாங்கள் பெற்றுக் கொடுத்திருக்கிற சுதந்திரமாகும்.  பயங்கரவாதத்தினால் பல ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்திருக்கும் நாட்டை வளமாக்க இங்கு வாழும் அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் மேதினத்தை கொண்டாடும் ஐக்கிய தேசியக் கட்சியினர் அவர்களது ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததற்காக மன்னிப்பு கேட்டிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன். ஏகாதிபத்தியவாதிகள் தற்போது மனித உரிமைகள் என்ற போர்வையில் இலங்கையை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். இறையாண்மை கொண்ட சுதந்திரமான நாடு இது. இங்கு வாழும் சிலரது சிந்தனை ஐரோப்பாவில் வாழ்வதைப் போல உணர்கின்றனர். அவர்கள்தான் இலங்கையைக் காட்டிக் கொடுக்கின்றனர். எங்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் சூழ்ச்சிகள் மூலமாக வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் எமது அரசைக் கவிழ்க்க ஒருபோதும் சந்தர்ப்பம் கொடுக்க மாட்டோம் என்றார் மகிந்த ராஜபக்சே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago