முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடக்கம்

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் - 28 - பத்தாம் வகுப்பு, ஒ.எஸ்.எல்.சி. தேர்வுகள் இன்று (28.3.2011) துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 57 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 57 ஆயிரம் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேரும் அடங்குவர். தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கும். கேள்வித் தாள்களை படிக்க  10 நிமிடங்களும், விடைத்தாளில் தேர்வு எண்ணை எழுத 5 நிமிடமும் ஆக 15 நிமிடம் கூடுதலாக கொடுக்கப்படும். தேர்வு நேரம் மொத்தம் இரண்டரை மணி நேரமாகும். எனவே 12.45 க்கு தேர்வு முடிவடையும். தமிழகம் முழுவதும் 2,923 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

தேர்வு மையங்களில் முறைகேடாக நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தேர்வு மையங்களில் போஸ்ட்டர்களில் ஒட்டப்பட்டுள்ளது. 

தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களை பிடிப்பதற்காக பறக்கும் படையும் தயார் நிலையில் உள்ளது. தேர்வு மையத்திற்கு அருகில் வாக்கு சேகரிக்கும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒலிபெருக்கியின் ஒலி அளவை குறைவாக வைக்கவேண்டும் என்ற கோர்ட்டின் உத்தரவுப்படி, தேர்வு எந்த விதத்திலும் பாதிக்காத அளவிற்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்படி தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. 

இன்று திங்கட் கிழமை தமிழ் முதல் தாளும், 29 அன்று தமிழ் இரண்டாம் தாளும், 31 ம் தேதி ஆங்கிலம் முதல் தாளும், ஏப்ரல் 1 ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாளும், ஏப்ரல் 5 ம் தேதி கணக்குத் தேர்வும், ஏப்ரல் 8 ம் தேதி அறிவியல் தேர்வும், ஏப்ரல் 11 ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளன. 

மதுரை மாவட்டத்தில் 269 பள்ளிகளைச் சேர்ந்த  35 ஆயிரத்து 907 பேர் இந்த பொதுத் தேர்வை எழுதுகின்றனர். இதில் மாணவர்கள் 17 ஆயிரத்து 628 பேர். மாணவிகள் 18 ஆயிரத்து 279 பேர். 108 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago