முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார்

சனிக்கிழமை, 5 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,- மே 5 - அழகர்மலையில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு அழகர்  நேற்று மாலை மதுரை நோக்கி புறப்பட்டார். இன்று அதிகாலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது.    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.  மீனாட்சி திருக்கல்யாணமும்,  தேரோட்டமும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் அழகர் கோவில் சித்திரைதிருவிழாவும் கடந்த 20 ம் தேதி தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை முகூர்த்தத்துடன் தொடங்கி  நடைபெற்று வருகிறது. தினமும் அழகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.   நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை அழகர்மலையில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு அழகர் பட்டாசு மற்றும் வானவேடிக்கைகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மதுரை நோக்கி புறப்பட்டார். பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளும் அழகரை இன்று அதிகாலை 3 மணிக்கு கடச்சேனந்தல், மூன்றுமாவடி மற்றும் புதூர் பகுதியில் மதுரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதே போல் மாலையில் அவுட்போஸ்டிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து அழகரை வரவேற்பார்கள்.   இன்று இரவு தல்லாகுளம் பிரசன்னவெங்கடாஜலபதி கோவிலில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை அழகருக்கு சாற்றி பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  காலை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 5.45 மணிமுதல் 6.15மணிக்குள் மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் அழகர் இறங்குகிறார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசிக்கிறார்கள். இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் பிறகு  அழகர் இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலை அடைகிறார். அங்கு விடிய,விடிய பக்தர்கள் திரண்டு வந்து  அழகரை வழிபடுவார்கள். மறுநாள் வைகை ஆற்றுக்குள் தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு முக்தி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு ராமராயர் மண்டகப்படியில் விடிய,விடிய அழகரின் தசாவதார காட்சிகள் நடைபெறும். 8ம் தேதி காலை மோகினி அவதாரத்துடன் அழகர் புறப்பட்டு அனந்தராயர் மண்டகப்படி அடைகிறார். அங்குராஜாங்க திருக்கோலம் பூண்டு இரவு 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் மலையை நோக்கி அழகர் புறப்படுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்