முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும்-ஜி.ராமகிருஷ்ணன்

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச். - 27 - 108 ஆம்புலன்ஸ், போலீஸ் எஸ்கார்ட் வாகனங்களிலும் பணம் கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வருகிறது. நேர்மையான முறையில் தேர்தல் நடக்க பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:​ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இன்று(நேற்று) தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் அரசியல், சமூக, பொருளாதாரம் உள்பட அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. எங்கள் பிரசாரமும் தொடங்கி விட்டது. அகில இந்திய நிர்வாகிகளான பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா காரத் ஆகியோரும் பிரசாரம் செய்ய தமிழகத்திற்கு வருகின்றனர்.

50​க்கும் மேற்பட்ட கலைக்குழுவும் பிரசாரத்தில் ஈடுபடுகிறது. திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலாவை இந்த தேர்தலில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற பணப் பட்டுவாடாவை தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ்,  போலீஸ் எஸ்கார்ட் வாகனங்களிலும் பணம் கொண்டு செல்லப்படுவதாக தகவல் வருகிறது. இதையும் தேர்தல் கமிஷன் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். 

முதலமைச்சர் கருணாநிதி திருவாரூர், தஞ்சை, திருச்சி பொதுக் கூட்டங்களில் பேசி உள்ளார். ஒரு இடத்தில் கூட மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி பேசவில்லை. விலைவாசி உயர்வு, ஊழலை ஒழிப்பது, மின்வெட்டுக்கு தீர்வு குறித்து பேசவில்லை. தேர்தல் ஆணையத்தைப் பற்றித்தான் கடுமையாகச் சாடியுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு கொளத்தூர் தொகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார். 234 தொகுதியிலும் கோடி கோடியாக பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்