முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை 3 ஆசிய நாடுகள் முதன்முறையாக அரை இறுதிக்கு முன்னேற்றம்

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச். - 28  - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இலங்கை மற்று ம் பாகிஸ்தான் ஆகிய 3 ஆசிய நாடுகள் முதன் முறையாக அரை இறு திச் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இது பற்றிய விபரம் வருமாறு -  10 - வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங் கை மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தி வருகி ன்றன. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து உள்ளது.  கடந்த மாதம் 19 -ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் மொத்தம் 14 நாடுகள் பங்கேற்றன. லீக் முடிவில் ஏ பிரிவில் இருந்து பாகிஸ் தான், இலங்கை, உலக சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலா ந்து ஆகிய 4 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. 

பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆகியவை லீக் போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. 

ஜிம்பாப்பே, கனடா, கென்யா, வங்காளதேசம், அயர்லாந்து, நெதர் லாந்து ஆகிய 6 அணிகள் லீக் முடிவில் போட்டியில் இருந்து வெளியேறின. இந்த அணிகள் லீக் ஆட்டத்தில் மோசமாக ஆடியதே தோல்விக்கு காரணமாகும். 

கால் இறுதி ஆட்டத்தில் ஜாம்பவான் அணிகள் வெளியேற்றப்பட்ட ன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய திற மை வாய்ந்த அணிகள் தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டன. 

இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும், பா கிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவு அணியையும், நியூசிலாந்து 49 ரன்னில் தென் ஆப்பிரிக்கா வையும், இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும் தோற்கடித்தன. 

இந்தியா , பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. 3 ஆசிய நாடுகள் உலகக் கோப்பை போட்டியின் ரை இறுதிக்கு முதன் முறையாக தகுதி பெற்றன. 

இதில் இந்தியா 1983 -ம் ஆண்டும், பாகிஸ்தான் 1992 -ம் ஆண்டும், 1996 -ம் ஆண்டு இலங்கை அணிகள் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றின. 

முதல் அரை இறுதியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் வரு கிற 29 -ம் தேதி மோதுகின்றன, இந்த ஆட்டம் கொழும்பு நகரில் நட க்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரப் பயிற்யிசில் ஈடுபட்டுள்ளன. 

2 - வது அரை இறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் வருகிற 30 ம் தேதி மொகாலியில் நடக்கிறது. இறு திப் போட்டி ஏப்ரல் மாதம் 2 -ம் தேதி நடக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்