முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் கார் குண்டு வெடித்து சிதறி 15 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2012      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, மே. - 6 - ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள காகசஸ் பிராந்தியத்தில் உள்ள டஜஸ்தான் என்ற இடத்தில் ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த 2 வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. ஒரு போலீஸ் செக்போஸ்டை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த கார் குண்டு தாக்குதலில் 15 பேர் பலியானார்கள். மேலும் 122 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களில் 12 பேர் போலீஸ்காரர்கள். 3 பேர் போலீஸ் அதிகாரிகள். இவர்கள் அவசர நிலை அமைச்சகத்தை சேர்ந்தவர்கள். பலியானவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. சிதறிக் கிடந்த உடல்களை மீட்டு அவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது. இந்த பிராந்தியத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே இஸ்லாமிய தீவிரவாதிகள் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று போலீஸ் செக்போஸ்டை குறி வைத்து இந்த கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே காரில் 2 குண்டுகள் வைக்கப்பட்டு இருந்ததாகவும், இதை தற்கொலைப்படை தீவிரவாதிகள்தான் நடத்தியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.   
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony