முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் ஜனாதிபதி பிரதீபா உரையாற்றுகிறார்

திங்கட்கிழமை, 7 மே 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே. - 7- 60-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு வருகிற 13ம் தேதி பாராளுமனஅற சிறப்புக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் உரையாற்றுகிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு டாக்டர் அம்பேத்கார் தலைமையில் சட்ட வல்லுனர்கள் குழு முழுமையான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியது. இதை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றம் ஏற்படுத்தப்பட்டது. பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் 1952ம் ஆண்டு மே மாதம் 13 ம் தேதி நடந்தது. முதல் கூட்டம் நடந்து வருகிற 13ம் தேதியுடன் 60 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. எனவே வருகிற 13ம் தேதி 60ம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா பாராளுமனஅற மத்திய மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் இருசபை உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர். ஜனாதிபதி பிரதீபா உரையாற்றுகிறார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, சபா நாயகர் மீராகுமார் ஆகியோரும் பேசுகிறார்கள்.  பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பாராளுமன்ற 60 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு ரூ.5, ரூ.10 சிறப்பு நாணயங்களும், தபால் தலை வெளியிடப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்