முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி முன்னிலையில் விஜயகாந்தை தரக்குறைவாக பேசிய வடிவேல் மீது தேர்தல் கமிஷன் வழக்கு

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச், - 28 - தனது கன்னிப் பேச்சையே கலவர பேச்சாக மாற்றி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கருணாநிதி முன்னிலையில் தரக்குறைவாக விமர்சித்ததாக நடிகர் வடிவேலு மீது 3 பிரிவுகளில் தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி திருவாருர் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியில் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர்களும் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். இதேபோல் நடிகர் வடிவேலுவும் தி.மு.க.வுக்கு ஆதரவக பிரசாரம் செய்வது என முடிவு செய்தர். இதையடுத்து கருணாநிதியை சந்தித்த வடிவேலு தனது பிரச்சார விருப்பத்தை தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 23-ந் தேதி திருவாரூரில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டம் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களான பா.ம.க. தலைவர் ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் மற்றும் கூட்டணி கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக முதன்முதலாக நடிகர் வடிவேலு மேடையில் ஏறி பேசினார். அப்போது, கடல் தண்ணீரில் கப்பலை ஓட்டுபவர் தான் கேப்டன், எந்தநேரமும் தண்ணீரில் மிதப்பவருக்கு பெயர் கேப்டன் இல்லை என்றும், புதிதாக கட்சி தொடங்கிய ஒருவர் நான் தான் அடுத்த முதல்வர் என கூறி வருகிறார். அவர் முதல் என்றால், நான் பிரதமர், அவர் பிரதமர் என்றால், நான் ஜனாதிபதி, அவர் ஜனாதிபதி என்றால் நான் ஒபாமா என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை குறிவைத்து தாக்கிப்பேசினார். ஏற்கனவே விஜயகாந்த், வடிவேலு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு போலீஸ் வழக்கு வரை போனது.

இதையடுத்து விஜயகாந்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன் என்று வடிவேலு அறிவித்திருந்தார். இந்நிலையில் வடிவேலுவின் திருவாரூர் பொதுக்கூட்ட பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  பொதுமக்கள் பலரும் வடிவேலுவின் பேச்சை கேட்டு முகம் சுழித்தனர். வடிவேலு தனது தனிப்பட்ட விரோதத்தை பொது மேடையில் வஞ்சம் தீர்த்து கொள்கிறார், அதை முதலமைச்சர் பொறுப்பில் உள்ள கருணாநிதியும் ரசித்து சிரிக்கிறாரே என்று பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் வடிவேலு இதே பாணியிலேயே பல மேடைகளில் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு விஜயகாந்தை தரக்குறைவாக பேசியதை கண்டித்து தே.மு.தி.க. உயர்மட்டக்குழு உறுப்பினர் திலீப்குமார் சென்னையில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் தனிப்பட்ட முறையில் ஒரு வரை தரக்குறைவாக பேசியதை அனுமதிக்கக்கூடாது என்று புகார் செய்தார்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி திருவாரூர் டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவையடுத்து திருவாரூர் டவுன் போலீசார் நடிகர் வடிவேலு மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நடிகை குஷ்பு மீதும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வழக்கு தொடரப்பட்டுள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்