முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜகஸ்தான் பிரசிடெண்ட்ஸ் குத்துச்சண்டை: இந்திய வீரர் தேவேந்ரோ

திங்கட்கிழமை, 7 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

அல்மட்டி, மே - 7 - கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் பிரசிடெண்ட்ஸ் குத்துச்சண்டை போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் தேவேந்ரோ தகுதிபெற்றுள்ளார்.  கஜகஸ்தான் நாட்டின் அல்மட்டி நகரில் சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் ஒன்றான கஜகஸ்தான் பிரசிடெண்ட்ஸ் கப் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் லைட் பிளைவெயிட் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் தேவேந்ரோ,  ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவரும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றவருமான கஜகஸ்தானின் பிர்ஜான் ஸாகிபோவுடன் மோதினார். 20 வயதான இளம் இந்திய வீரர் தேவேந்ரோசிங் மற்றும் பிர்ஜான் இடையேயான ஆக்ரோஷமான போட்டி கிட்டத்தட்ட இறுதிப் போட்டி போன்ற உணர்வை ஏற்படுத்தியது. காலிறுதி போட்டியில் ரஷ்ய வீரர் எகரோவ் வாசிலியை வென்ற இந்திய வீரர், அரையிறுதி போட்டியிலும் துவக்கம் முதலே ஆக்ரோஷமான தாக்குதலை ஆரம்பித்தார். இவருடைய ரிங் மூவ்மெண்டுகள் மிகச் சிறப்பாக இருந்தன. முதல் சுற்றின் முடிவில் 3 - 2 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தார் இந்திய வீரர். இரண்டாவது சுற்றிலும் சிறப்பாக செயல்பட்டார் தேவேந்ரோ. ஆனால் மூன்றாவது சுற்றில் அனுபவ வீரரான பிர்ஜான் அதிரடியாக குத்துக்களை விட ஆரம்பித்தார். இதனால் தேவேந்ரோ தற்காப்பாக செயல்பட்டார். இதனால் இந்திய வீரரின் வெற்றியை கஜகஸ்தான் வீரர் பறிக்கும் நிலையும் ஏற்பட்டது. ஆனால் இறுதியில் இந்திய வீரர் வெற்றிபெற்றார். 

இந்த பிரிவின்  இறுதிப் போட்டியில் இந்திய வீரர் தேவேந்ரோ,  கியூபாவின் யோஸ்வனி வெய்டாவை சந்திக்க இருக்கிறார். 

ஏற்கனவே இந்த போட்டித் தொடரில் 91 கிலோ எடை பிரிவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற மன்பரீத்சிங் மற்றும் 91 கிலோவுக்கு கூடுதலான எடைப் பிரிவில் கன்வர் பிரீத்சிங் ஆகியோர் அரையிறுதி போட்டிகளில் தோல்வி அடைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்