முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹில்லாரியுடனான பேச்சு பயனுள்ள விதத்தில் இருந்தது -மம்தா

செவ்வாய்க்கிழமை, 8 மே 2012      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மே - 8 - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுடன் நடந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. மேற்கு வங்கத்தில் அமெரிக்கா பெருமளவில் முதலீடுகளைச் செய்யும் என்றும் மம்தா பானர்ஜி  உறுதியளித்துள்ளார். ஹில்லாரி கிளிண்டனுடனான சந்திப்புக்குப் பின்னர் ரைட்டர்ஸ் பில்டிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மம்தா பானர்ஜி. அப்போது அவர் கூறுகையில், ஹில்லாரி கிளிண்டனை சந்திக்க நான் பெரும் ஆர்வமாக இருந்தேன். தற்போது நடந்த சந்திப்பு மகிழ்ச்சி தருகிறது, பயனுள்ளதாக  இருந்தது. எனக்கு தாகூரின் கவிதை வரிகள் பதிக்கப்பட்ட துணி ஒன்றைப் பரிசாக அளித்தார் ஹில்லாரி. விவேகானந்தரால் புகழ்பெற்ற சிகாகோ சர்வ சமய மாநாட்டைப் போல கொல்கத்தாவில் ஒரு மாநாட்டை நடத்த விரும்புவதாக நான் ஹில்லாரியிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் ஆதரவு தெரிவித்தார். கொல்கத்தாவை மாபெரும் தகவல் தொடர்பு மையமாக மாற்ற எனது அரசு ஆர்வத்துடன் இருப்பதை அவரிடம் தெரிவித்தேன். அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் விளக்கினேன். எனது அரசு செயல்பட்டு வரும் விதத்தை ஹில்லாரி கிளிண்டன் பாராட்டினார். மேற்கு வங்கத்தில் அமெரிக்கா பெருமளவில் முதலீடு செய்யும் என்றும் உறுதியளித்தார். அரசியல் காரணங்களால்தான் இத்தனை காலமாக அமெரிக்காவிலிருந்து எந்த முதலீடும் மேற்கு வங்கத்திற்கு வராமல் போய் விட்டது. ஆனால் இப்போது அந்தச் சூழ்நிலை இல்லை. எனவே பெருமளவிலான அமெரிக்க முதலீடுகள் இனி சாத்தியமானதே என்று ஹில்லாரி கூறியுள்ளார். வங்க திரைப்படத் துறையிலும் பெருமளவில் அமெரிக்கா முதலீடு செய்ய நல்ல வாய்ப்புள்ளதாக அவரிடம் நான் தெரிவித்தேன். ஷாருக்கான் குறித்தும் நான் ஹில்லாரியுடன் பேசினேன். அவர் இந்தியாவில் மிகப் புகழ்பெற்ற நடிகர் என்பதையும் அவரிடம் விளக்கினேன் அமெரிக்காவுக்குப் போகும்போதெல்லாம் ஷாருக்கை அமெரிக்க அதிகாரிகள் அவமதிப்பதை சுட்டிக் காட்டி இப்படிப் பேசினார் மம்தா. சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடுகள் குறித்து ஹில்லாரியுடன் நான் பேசவில்லை. அவரும் அதுபற்றி பேசவில்லை. கல்வியில் நிறைய முதலீடு செய்ய விரும்புவதாக கொள்கை அளவில் ஹில்லாரி ஒப்புக் கொண்டார். மேலும் மேற்கு வங்க மாநில வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். மொத்தத்தில் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருந்தது என்றார் மம்தா.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago