முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூர் சேலஞ்சர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்சை வீழ்த்தியது

செவ்வாய்க்கிழமை, 8 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், மே. - 8 - 5 - வது ஐ.பி.எல். 20 -க்கு 20 போட்டியி ல் பெங்களூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெ

ற்றி பெற்றது.  இந்தப் போட்டியில் பெங்களூர் அணி தரப்பில், தில்ஷான் மற்றும் டிவில்லிய

ர்ஸ் இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு பக்கபலமாக கெய்ல் மற்றும் அகர்வால் ஆகியோர் ஆடினர்.  முன்னதாக பெளலிங்கின் போது, பெ

ங்களூர் வீரர்களால் டெக்கான் அணியை கட்டுப் படுத்த முடியவில்லை. அந்த அணியும் சவாலான ஸ்கோரை எடு த்தது. ஐ.பி.எல். போட்டியின் 50 - வது லீக் ஆட்டம் பெங்களூரில் உள்ள எம். ஏ. சின்னசாமி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கேப்டன் சங்கக்கரா தலைமையி லான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், கேப்டன் விராட் கோக்லி தலைமையி லான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.  இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி பீல்டிங்கை தே

ர்வு செய்தது. டெக்கான் அணி தரப்பி ல், ஹாரிஸ் மற்றும் எஸ். தவான் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். டெக்கான் அணி இந்த ஆட்டத்தில் சிற ப்பாக ஆடி பிரமாண்ட ஸ்கோரை எட்டியது. அந்த அணி இறுதியில் நிர்ணயிக் கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். துவக்க வீரர்கள் இருவரும் இந்த ஆட்டத்தில் நன்கு பேட்டிங் செய்து நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருந்த போதிலும், டெக்கான் அணியால் வெற்றி பெற முடியவில்லை. எஸ். தவான் 52 பந்தில் 73 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 10 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். ஜே. ஹாரிஸ் 41 பந்தில் 47 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். கிரேக் ஒயிட் 24 பந்தில் 45 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, சங்கக்கரா 10 ரன்னை எடுத்தார். பெங்களூர் அணி தரப்பில், பரமேஸ்வ

ரன் 45 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ஜாஹிர்கான் , மிதுன், மற்று

ம் முரளீதரன் ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. பெங்களூர் அணி 182 ரன்னை எடுத்தா

ல் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை டெக்கான் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி புத்திசாதுர்யமாக பேட்டிங் செய்து, 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்

னை எடுத்தது. இதனால் இந்த லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.பெங்களூர் அணி தரப்பில், துவக்க வீரராக இறங்கிய தில்ஷான் 54 பந்தில் 71 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். டிவில்லியர்ஸ் 17 பந்தில் 47 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காம

ல் இருந்தார். இதில் 5 பவுண்டரி மற்று ம் 3 சிக்சர் அடக்கம். தவிர, கெய்ல் 22 பந்தில் 26 ரன்னையும், அகர்வால் 6 பந்தில் 18 ரன்னையும் எடுத்தனர். டெக்கான் அணி தரப்பில், அமித் மிஸ்

ரா 28 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிரதாப் சிங், ஆனந்த் ராஜன் மற்றும் ஆசிஸ் ரெட்டி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்