முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் பதவி விலக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை

புதன்கிழமை, 9 மே 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.9 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தன் மகனுக்கு சலுகை காட்டியதாகவும் இதனையொட்டி ப.சிதம்பரம் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற ராஜ்யசபையில் அ.தி.மு.க. உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் சபையை நடத்த முடியாததால் நேற்றுமதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. 

ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 14-ம் க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் கனிமொழி உள்பட பலர் நிபந்தனை ஜாமீனில் வந்துள்ளனர். ஆ.ராசா இன்னும் ஜாமீனில் விடுதலை செய்யப்படவில்லை. 

இந்தநிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரத்திற்கு தொடர்பு உள்ளது. அதனால் அவரையும் இந்த ஊழல் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். இதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் சாமி அப்பீல் செய்துள்ளார். இந்த அப்பீல் மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் தகவல் தொழில்நுட்ப கம்பெனி நடத்தி வருவதாகவும் அதனால் கார்த்திக்கிற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சலுகை காட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினையை நேற்று பாராளுமன்ற ராஜ்யசபையில் சபை கூடியதும் அ.தி.மு.க., பாரதியஜனதா, இடதுசாரி கட்சிகள் எழுப்பின. மகன் கார்த்திக்கிற்கு சலுகை காட்டிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்த கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றுபோல் எழுந்து கோஷமிட்டனர். அப்போது இருந்த சபை தலைவர், எவ்வளவோ கோரியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொஞ்சம் கூட அசராமல் ப.சிதம்பரத்தை பதவி விலகக்கோரி வலியுறுத்திக்கொண்டே இருந்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ளமுடியாமல் நேற்று மதியம் வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்