முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா ரைடர்ஸ் டெல்லி அணியை வீழ்த்தியது

புதன்கிழமை, 9 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

டெல்லி, மே. 9 - 5 - வது ஐ.பி.எல். போட்டியில் டெல் லியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக் கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில், துவக்க வீரராக இறங்கி ய மெக்குல்லம் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெ ற்றுத் தந்தார். அவருக்குப் பக்கபலமாக கேப்டன் காம்பீர், காலிஸ் ஆகியோர் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

முன்னதாக பெளலிங்கின் போது, கா லிஸ் அபாரமாக பந்து வீசி 2 விக்கெட் எடுத்தார். சுனில் நரைன் 2 விக்கெட் எடுத்தார். அவருக்குப் பக்கபலமாக பிரட்லீ மற்றும் சங்க்வான் ஆகியோர் பந்து வீசினர். 

ஐ.பி.எல். போட்டியின் 51 - வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள பெரோ ஷா கோட்லா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் கேப்டன் சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், கேப்டன் காம்பீர் தலைமையிலான கொல்கத் தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. 

இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணி சார்பில் வார்னர் மற்றும் சேவாக் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். இறுதியில் அந்த அணி நிர் ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்னை எடுத்தது. 

இர்பான் பதான் 34 பந்தில் 36 ரன்னை எடுத்தார். ஜெயவர்த்தனே 45 பந்தில் 30 ரன்னையும், சேவாக் 17 பந்தில் 23 ரன் னையும், வார்னர் 27 பந்தில் 21 ரன்னையும் எடுத்தனர். தவிர, டெய்லர் 16 ரன் னையும், வி. நாகர் 10 ரன்னையும்  எடு த்தனர். 

கொல்கத்தா அணி தரப்பில் காலிஸ் 20 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத் தார். நரைன் 23 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிரட்லீ மற் றும் சங்க்வான் ஆகியோர் தலா 1 விக் கெட் எடுத்தனர். 

கொல்கத்தா அணி 154 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை டெல்லி அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்னை எடு த்தது. 

இதனால் கொல்கத்தா அணி இந்த லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

கொல்கத்தா அணி தரப்பில், பிரண்டன் மெக்குல்லம் 44 பந்தில் 56 ரன்னை எடு த்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். தவிர, காம்பீர் 21 பந்தில் 36 ரன்னையு ம், காலிஸ் 27 பந்தில் 30 ரன்னையும், எடுத்தனர். தவிர, எம்.கே. திவாரி 8 ரன் னையும், யூசுப் பதான் 7 ரன்னையும் எடுத்தனர். 

டெல்லி அணி தரப்பில், உமேஷ் யாத வ் 30 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மார்கெல் 35 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இந்த ப் போட்டியின் ஆட்டநாயகனாக

காலிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்