முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் பயண மானியத்தை ரத்து செய்ய உத்தரவு

புதன்கிழமை, 9 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.9 - ஹஜ் பயணத்திற்கு மான்யம் வழங்கும் மத்திய அரசின் கொள்கைக்கு சுப்ரீம்கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. மான்யம் வழங்குவதை வரும் 10 ஆண்டுகளில் படிப்படியாக குறைத்து அடியோடு நீக்கிவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது. மான்யம் வழங்கும் கொள்கையை அடியோடு கைவிடுவதுதான் நல்லது என்று நீதிபதிகள் அல்டமாஸ் கபீர்,ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் தங்களுடைய தீர்ப்பில் கூறியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக பிரதமரின் நல்லெண்ண பயண குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 ஆக குறைக்கவும் மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்திய ஹஜ் கமிட்டியின் செயல்பாட்டையும் ஹஜ் பயணத்திற்கு பயணிகள் தேர்வு செய்யப்படுவதையும் சுப்ரீம்கோர்ட்டு கண்காணிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

முஸ்லீம் பெருமக்கள் ஆண்டுதோறும் புனித பயணமாக மெக்காவிற்கு சென்று வருகிறார்கள். மெக்காவிற்கு சென்று வருவது இந்துக்கள் காசிக்கு சென்று வருவது மாதிரியாகும். ஹஜ் பயணத்திற்கு மத்திய அரசு செலவு தொகையாக மான்யம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்