முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் - புனே வாரியர்ஸ் இன்று பலப்பரிட்சை

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஜெய்பூர், மே. 13 - ஐ.பி.எல். போட்டியில் ஜெய்பூரில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தி ல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன. ராஜஸ்தான் அணிக்கு இன்னும் அரை இறுதி வாய்ப்பு உள்ளது. அடுத்து நடக் க இருக்கும் லீக் போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், புனே வாரியர்ஸ் அணியும் ஜெய்பூரில் உள்ள சவாய் மான் சிங் அர ங்கத்தில் இன்று மோத இருக்கின்றன. 

புனே வாரியர்ஸ் அணி இந்த சீசனில் மோசமாக ஆடி தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. இதனை அந்த அணி நன்கு பயன்படுத் தி தனது அரை இறுதி வாய்ப்பை பிர காசப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

இந்த ஐ.பி.எல். சீசனில் ராஜஸ்தான் அணி இதுவரை மொத்தம் 13 போட்டி களில் பங்கு கொண்டு 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று உள்ளது. இன்னும் மீதமுள்ள 3ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அரை இறுதி வாய்ப்பு என்ற நிலையில் அந்த அணி உள்ளது. 

புனே வாரியர்ஸ் அணி இதுவரை மொ த்தம் 14 ஆட்டத்தில் பங்கேற்று 4 வெற் றியுடன் 8 புள்ளிகள் மட்டுமே பெற்று உள்ளது. இதனால் அந்த அணி 8 - வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சென் னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதி ரான லீக்கில் பரபரப்பான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது அந்த அணிக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் அந்த அணியின் கேப் டன் பிரச்சினையும் தலைவலியை உரு வாக்கி உள்ளது. செளரவ் கங்குலிக்கு பதிலாக புதிய கேப்டன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

கங்குலிக்கு நேற்று முதல் ஓய்வு அளிக் கப்பட்டு உள்ளதாக புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளரான சுப்ரட்டா ராய் தெரிவித்து இருக்கிறார். மேலும், அடுத்த சீசனில் அவர் புனே அணிக்கு பயிற்சியாளராக இருப்பார் என்று கூறி யிருக்கிறார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது போன்ற பிரச்சினைகள் கிடையாது. அந்த அணி கேப்டன் டிராவிட்டின் தலை மையின் கீழ் வெற்றி நடை போட்டு வருகிறது. 

சிறந்த எதிரணிகளுக்கு எதிராக ராஜஸ் தான் ராயல்ஸ் அணி நல்ல ஆட்டத் திறனை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் ஒரு சில சமயங்களில் நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விடுகிறது. 

ஜெய்பூரில் புனே அணிக்கு எதிராக நடக்க இருக்கும்ஆட்டத்தில் ராஜஸ் தான் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. இருந்த போதிலும், அந்த அணி மீதமுள்ள 3 ஆட்டத்திலும் வென்றால் தான் அரை இறுதி வாய்ப்பை நினைத்துப் பார்க்க முடியும். 

எனவே ராஜஸ்தான் அணியின் கேப்ட னான ராகுல் டிராவிட் இது குறித்து அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வெற்றிக்காக புதிய வியூகம் அமைத்து வருகிறார். 

கடந்த சில போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டும் சிறப்பாக இருந்தது. இதனா ல் அந்த அணியால் இரண்டு வெற்றி யை பெற முடிந்தது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முக்கி யமான ஆட்டத்தில், மழை குறுக்கிட்ட தால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது.

இந்தத் தொடரில் முதலில் அபாரமாக ஆடி வந்த ரகானே கடந்த சில போட்டிகளில் பிரகாசிக்க வில்லை. இருந்த போதிலும், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் நல்ல பார்முக் கு வந்தது அந்த அணிக்கு கைகொடுக்கிறது. 

கேப்டன் டிராவிட்டும் இந்த சீசனில் கலக்கி வருகிறார். ஆனால் மற்ற வீரர் கள் எதிர்பார்த்த அளவிற்கு விளையா டவில்லை. முக்கியமாக கடைசி ஆட்டத்தில் சொதப்பி விட்டனர். 

டெல்லி மற்றும் சென்னை அணிகளுக் கு எதிரான போட்டியில் வாட்சன் பந் து வீச்சிலும் கலக்கினார். தவிர, சித்தா ர்த் திரிவேதியும் தனது பந்து வீச்சின் மூலம் நம்பிக்கை அளித்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்