முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெய்ல் அதிரடியால் பெங்களூர் சேலஞ்சர்ஸ் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

புனே, மே. 13 - 5 -வது ஐ.பி.எல். போட்டியில் புனேயி ல் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்க ளூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 35 ரன் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு அதிக ரித்துள்ளது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி தரப்பில் துவக்க வீரர்களாக இறங்கிய கெய்ல் மற்றும் தில்ஷான் இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக, எஸ். எஸ். திவாரி ஆடினார். 

பின்பு பெளலிங்கின் போது, முன்னணி பந்து வீச்சாளர்களான ஜாஹிர்கான் மற் றும் வினய்குமார் இருவரும் அபாரமா க பந்து வீசி 5 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அவர்களுக்கு ஆதர வாக முரளீதரன், அப்பன்னா மற்றும் எச்.வி. படேல் ஆகியோர் பந்து வீசினர். 

ஐ.பி.எல். போட்டியின் 57 - வது லீக் ஆட்டம் புனே நகரில் உள்ள சுப்ரட்டா ராய் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கேப்டன் கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும், கேப்டன் விராட் கோக்லி தலைமையிலான பெ ங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. 

இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்க ளூர் அணி வீரர்கள் அபாரமான பேட்டி ங் திறனை வெளிப்படுத்தி அணி  பிர மாண்டமான ஸ்கோரை எடுக்க உதவி னர். 

பெங்களூர் அணி இறுதியில் நிர்ணயிக் கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பி ற்கு 173 ரன்னை எடுத்தது. இதில் 2 வீரர் கள் அரை சதமும், ஒரு வீரர் கால் சதமு ம் அடித்தனர். 

மே.இ.தீவு வீரரான கெய்ல் 31 பந்தில் 57 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்ட ரி மற்றும் 6 சிக்சர் அடக்கம். தில்ஷான் 44 பந்தில் 53 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, எஸ்.எஸ். திவாரி 30 பந்தில் 36 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். 

புனே வாரியர்ஸ் அணி சார்பில் மேத்யூகஸ் 14 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட்எடுத்தார். ரோகித் சர்மா 31 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ஏ.சி. தாமஸ், பி. குமார் மற்றும் உபாத்யாய் ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில் லை. 

புனே வாரியர்ஸ் அணி 174 ரன்னை எடு த்தால் வெற்றி  பெறலாம் என்ற கடின இலக்கை பெங்களூர் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற் கு 138 ரன்னை எடுத்தது. 

இதனால் பெங்களூர் அணி இந்த லீக் ஆட்டத்தில் 34 ரன் வித்தியாசத்தில் வெ ற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. இந்த வெற் றியின் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 4 -வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

புனே அணி தரப்பில், ராபின் உத்தப் பா அதிகபட்சமாக, 23 பந்தில் 38 ரன் னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். மஜும்தார் 26 பந்தில் 31 ரன்னை எடுத்தார். இதில் 4 பவு ண்டரி அடக்கம். எஸ்.பி. டி. ஸ்மித் 24 பந்தில் 25 ரன்னை எடுத்தார்.  தவிர, மைக்கேல் கிளார்க் 13 ரன்னையும், உபாத்யாய் 11 ரன்னையும் எடுத்தனர். 

பெங்களூர் அணி சார்பில் ஜாஹிர்கான் 21 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். வினய் குமார் 32 ரன்னைக் கொ டுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, முர ளீதரன் 2 விக்கெட்டையும், அப்பன் னா மற்றும் எச்.வி. படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago