முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சினுக்கு பாரதரத்னா தரக் கூடாது: நீதிபதி கட்ஜூ கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மே. - 14 - கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருது தரக் கூடாது என்று இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி கட்ஜூ தெரிவித்துள்ளார். அதே சமயம் மகாகவி சுப்பிரமணிய பாரதி, சரத் சந்திர சட்டோபாத்யாய, முன்ஷி பிரேம்சந்த் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று கூறுவது நமது பண்பாடு குறைந்து விட்டதையே காட்டுகிறது. சச்சினுக்கோ, கங்குலிக்கோ அந்த விருதை வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இவர்கள் இருவருக்குமே வழங்கக் கூடாது என்றே நான் சொல்வேன். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் போன்றோருக்கு இறப்புக்குப் பின்தான் பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது. பெண் விடுதலைக்காகவும், ஏழைகளுக்காகவும், பாடிய புரட்சிக் கவிஞர் காஸி நஸ்ரூல் இஸ்லாமுக்கு ஏன் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை என்று தெரியவில்லை. தமிழ்க் கவிஞர் மகாகவி பாரதி, சரத் சந்திர சட்டோபாத்யாய, முன்ஷி பிரேம்சந்த் ஆகியோருக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும். இந்தியாவின் சிறப்பம்சங்களை நஸ்ரூல் இஸ்லாமின் கவிதைகள் பிரதிபலிக்கின்றன. அவர் நிறைய உருது கவிஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது கவிதைகளை இந்தியில் மொழி பெயர்க்காதது வருத்தமளிக்கிறது. மேற்கு வங்கத்திற்கு வெளியே உள்ள மக்களால் அதை எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும். அதை மொழிபெயர்க்க உதவுமாறு முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேட்டுள்ளேன் என்றார். நிகழ்ச்சியில் நஸ்ரூல் இஸ்லாமின் மருமகள் கல்யாணி காஸிக்கு காளிதாஸ் காலிப் சம்மான் விருதை அவர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்