முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எல்.சி. ஸ்டிரைக் மேலும் நீடிக்கும் அபாயம்

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      இந்தியா
Image Unavailable

கடலூர், மே. - 14 - கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமையில் நெய்வேலி தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக நடந்த 3 ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வேலை நிறுத்தப் போராட்டம் மேலும் தீவிரமடையும் என ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலர் சேகர் தெரிவித்தார். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் 14 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 23 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்த போதிலும் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. முன்னதாக நெய்வேலி நிலக்கரி நிர்வாகம் சார்பில் மனிதவள மேம்பாட்டு துறை பொது மேலாளர் மகேஷ்வரன், தொழிலாளர் துறை உறவு பொது மேலாளர் அறிவு உள்ளிட்டோர் கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து ஏ.ஐ.டி.யூ.சி.யின் பொதுச் செயலர் சேகர், ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் குப்புசாமி, பொதுச் செயலர் வெங்கடேசன் ஆகியோர் கலெக்டரிடம் நீண்ட நேரம் பேச்சு நடத்தினர். இது குறித்து ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலர் சேகர் கூறுகையில், தொழிலாளர்களின் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் கொள்கையை நெய்வேலி நிலக்கரி நிர்வாகம் பரிசீலிக்கவில்லை. நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க ஆலோசனைகளை கலெக்டர் ஏற்றுக் கொள்ளவே இல்லை. தொடர்ந்து திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். சிறப்பு பேரவை கூட்டம் நடத்தி போராட்டத்தை நீட்டிக்க முடிவெடுக்கப்படும். இந்த நிலையில் நெய்வேலி நிலக்கரி நிர்வாகம், பயிற்சி இல்லாத புதிய ஆட்களை வேலைக்கு கொண்டு செல்கிறது. இது சட்டத்துக்கு புறம்பானது என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்