முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா

திங்கட்கிழமை, 14 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

தேனி,மே.- 14 - வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு செய்யப்பட்டு உள்ள அடிப்படை வசதிகளை தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தர்மசிவம் ஆய்வு செய்தார். தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கெளமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.திருவிழாவை முன்னிட்டு வீரபாண்டி பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.மேலும் கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் துப்பரவுப்பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.துப்பரவு பணியில் 300 பேர் ஈடுபட்டு உள்ளனர்.5 இடங்களில் தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.இந்த அடிப்படை வசதிகள் சரியான முறையில் செய்யப்பட்டு உள்ளதாஎன்று ஆய்வு நடத்துமாறு தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி உத்தரவிட்டார்.அதன் பேரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தர்மசிவம் வீரபாண்டி பகுதியில் ஆய்வு நடத்தினார்.அவர் கோயில் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் ஆற்றங்கரைப்பகுதிகளை பார்வையிட்டார்.மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.அவருடன் வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார்,போடி வட்டார வளர்ச்சி அலுவலர் வீராச்சாமி,உப்புக்கோட்டை ஊராட்சி தலைவர் சகுந்தலா ராமசாமி மற்றும் அதிகாரிகள் சென்றனர்.       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago