முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

60 வது ஆண்டு விழாவை கொண்டாடியது பாராளுமன்றம்

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      இந்தியா
Image Unavailable

பாராளுமன்றத்தின் 60 வது ஆண்டை முன்னிட்டு நேற்று நாடாளு மன்றத்தின் கூட்டுக்கூட்டம் நடைபெற்றது. இரு சபைகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், சா நாயகர் மீராகுமார்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் அனைவரும் பாராளுமன்றத்தின் மேன்மை பற்றி பேசினார்கள். பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையின் சிறப்பு பற்றி பேசினார். தி.மு.க. எம்.பி.க்களோ பாராளுமன்றத்தில் அண்ணாவின் சேவை பற்றி பேசினார்கள். இக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பலர் பாராளுமன்றத்திற்கு அடிக்கடி இடையூறு ஏற்படுவது பற்றி குறிப்பிட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசுகையில், ஒரு சில உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் அமைதியை குலைக்கிறார்கள், அதன் குரல்வளையை நெறிக்கிறார்கள் என்று கூறி வேதனைபட்டார். இந்த இடையூறுகளை ஒழித்து கட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பல கட்டங்களில் பாராளுமன்றத்திற்கு உச்ச கட்ட நெருக்கடி ஏற்படுகிறது. கடைசியில் இடையூறு தான் மிஞ்சுகிறது என்று கூறினார் பிரணாப் முகர்ஜி. பராளுமனஅறத்திற்கு இடையூறு செய்வதால் எந்த நோக்கமும் நிறைவேறப்போவதில்லை. நம்மால் கேட்க முடிவதில்லை. நம்மால் பேச முடிவதில்லை. அப்படி சில பேர் நடந்து கொள்கிறார்கள் என்று கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் முகர்ஜி. பிரதமர் பேசுகையில் ஜனநாயகத்தில் இந்தியா தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கிறது என்று பெருமையோடு குறிப்பிட்டார். சமூகநீதி, பயங்கரவாதம் போன்றவை நமக்குள்ள மிகப்பெரிய சவால்கள் என்று அருண்ஜெட்லி குறிப்பிட்டார். பாராளுமன்றத்தை உருவாக்கிய தலைவர்களில் தரத்திற்கு தகுந்தபடி எம்.பி.க்கள் நடந்து கொள்ளவேண்டும் எனஅறு சோனியா வலியுறுத்தினார். இகிகூட்டத்தில் பேசிய பல்வேறு தலைவர்களும் பாராளுமன்றத்தின் மேன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பாராளுமன்றத்தால் தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. வெளியில் இருக்கும் கும்பலால் அல்ல என்று சிலர் பேசினார்கள். லோக்பால் மசோதாவை வலியுறுத்திய போது சிலர் எம்.பி.க்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததை அவர்கள் இவ்வாறு சுட்டிக்காட்டினார்கள். மொத்தத்தில் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவரும் இந்திய ஜனநாயகத்தை பின்பற்றுவதை பெருமையோடு பேசினார்கள். வறுமை, பயங்கரவாதம் போன்ற பல பிரச்சனைகள் இருந்தும் உலகிலேயே இந்தியா முன்மாதிரியாக திகழ்கிறது என்றும் தலைவர்கள் குறிப்பிட்டனர்.
---------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்