முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரத்த மாதிரியை கொடுக்க முடியுமா? முடியாதா? திவாரிக்கு கோர்ட்டுகண்டிப்பு

திங்கட்கிழமை, 14 மே 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே - 15 - மரபணு சோதனை நடத்துவதற்கு இரத்த மாதிரியை கொடுக்க முடியுமா? முடியாதா? என்பது குறித்த தகவலை  2 நாளில் தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.திவாரிக்கு டெல்லி ஐகோர்ட்டு  உத்தரவிட்டுள்ளது.உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வரும்  முன்னாள் மத்திய அமைச்சருமான என்.டி. திவாரியை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று 32 வயது ரோஹித் ஷேகர் என்பவர்  கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு மீது விசாரணை நடத்திய டெல்லி ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு மரபணு சோதனைக்காக திவாரி தனது இரத்த மாதிரியை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கில் நேற்று விசாரணை நடத்திய டெல்லி  ஐகோர்ட்டு இன்னும் 2 நாட்களில் இரத்த மாதிரியை கொடுக்க முடியுமா? முடியாதா ? என்பதை  திவாரி தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லையேல் போலீசார் வலுக்கட்டாயமாக இரத்த மாதிரியை திவாரியிடமிருந்து பெறுவார்கள் என்றும்  உத்தரவிட்டுள்ளது.இந்த விசாரணையை நடத்திய ஐகோர்ட்டு நீதிபதி  ரேவா கேத்ரபால்,  திவாரி வக்கீல் கேட்டுக்கொண்ட ஒரு வார கால அவகாசத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.மேலும் ஐதராபாத்தில் உள்ள  விரல் ரேகை மற்றும் மரபணு ஆய்வு மையம் மரபணு சோதனைக்கான உபகரணங்களை  ஐகோர்ட்டின் பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago