முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணவீக்கம் 7.23 சதவீதமாக அதிகரித்துள்ளது

திங்கட்கிழமை, 14 மே 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே - 15 - நாட்டின் பணவீக்கம் 7.23 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நாட்டின் பணவீக்கம் 6.89 சதவீதமாக இருந்தது . இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.23 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் இதற்கு பருப்பு விலை உயர்வே  காரணம் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் காய்கறிகளின் விலைகள் 60. 97 சதவீதம் அதிகரித்துள்ளன.  கடந்த மார்ச் மாதம் காய்கறிகளின் விலைகள் 30.57 சதவீதம் மட்டுமே அதிகரித்து இருந்தன. ஆனால்  கடந்த ஏப்ரல் மாதத்தில்  இது  மேலும் அதிகரித்துள்ளது. பருப்பு வகைகளின் விலை 1.29 சதவீதமும், பால் பொருட்களின் விலைகள் 15.51 சதவீதமும், அரிசி மற்றும் உணவு தானியங்களின் விலைகள்  முறையே 5.68 சதவீதமும், 5.8 சதவீதமும் அதிகரித்துள்ளன. இந்த பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் பண வீக்கத்தின் மதிப்பு 7.23 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று பொருளாதார புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்