முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கார் கேலிச்சித்திர விவகாரம் லோக்சபையில் மீண்டும் அமளி

திங்கட்கிழமை, 14 மே 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே - 15 - சி.பி.எஸ்.இ. பாடபுத்தகத்தில் அம்பேத்கார் பற்றிய கேலிச்சித்திரம் வெளியானது தொடர்பாக லோக்சபையில் நேற்று மீண்டும் அமளி ஏற்பட்டது. மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளி  பாட புத்தகத்தில் அம்பேத்காரை பற்றிய கேலிச்சித்திரம் ஒன்று வெளியாகியுள்ளது. இது அம்பேத்காரை அவமதிக்கும் செயல் என்று புகார் எழுந்தது. இது தொடர்பாக பாராளுமன்றத்தின் லோக்சபை, ராஜ்ய சபை ஆகிய இரு சபைகளிலும் ஏற்கனவே சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்சனை நேற்று லோக்சபையில் மீண்டும் கிளப்பப்பட்டது. சிரோன்மணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த சைலேந்திர குமார் ஆகியோர் கேள்வி நேரத்திற்கு பிறகு இப்பிரச்சனையை எழுப்பினர். சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் வெளியாகியுள்ள இந்த சர்ச்சைக்குரிய அம்பேத்கார் கேலிச் சித்திரத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. சைலேந்திர குமார் எம்.பி. சபையின் மையப்பகுதிக்கு சென்று சில பேப்பர்களை காட்டினார். அப்போது அவரை அவரது இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் மீரா குமார் கேட்டுக்கொண்டார்.  இந்த கார்ட்டூன் சித்திரங்கள் அந்த பாட புத்தகத்தில் இருந்து அகற்றப்படும் என்று இந்த பிரச்சனை பாராளுமன்றத்தில் ஏற்கனவே கிளப்பப்பட்டபோதே தான் உறுதிபட கூறியிருந்ததை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் சுட்டிக்காட்டினார். பவன்குமார் பன்சாலின் பதில் திருப்தி அளிக்காததால் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்டு பேசிய நிதி அமைச்சரும், அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரங்கள் பாட புத்தகத்தில் இருந்து அகற்றப்படும் என்றும், தேவைப்பட்டால் அந்த பாட புத்தகங்களே நீக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த கார்ட்டூன் சித்திரம் வெளியானதற்கு காரணமானவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இதை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. நிருபம் கோரிக்கை விடுத்தார். இந்த பிரச்சனை முக்கியமான பிரச்சனைதான் இருந்தாலும் கேள்வி நேரம் முடிந்தபிறகு இப்பிரச்சனையை எழுப்பலாம் என்று எம்.பி.க்களை மீரா குமார் கேட்டுக்கொண்டார். இதையடுத்து இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago