முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். டி - 20 கடைசி பந்தில் பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி

செவ்வாய்க்கிழமை, 15 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி, மே. - 15 - 5-வது ஐ.பி.எல். 20 -க்கு 20 போட்டியி ல் மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெ க்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்திய து. இதில் அந்த அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கேப்டன் டேவிட் ஹஸ்சே அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு பக்க பலமாக மந்தீப் சிங், அசார் மெக்மூத், குர்கீரத் சிங் ஆகியோர் ஆடினர்.  இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏற்ற தாக இருந்ததால் இரு அணியின் பந்து வீச்சும் எடுபடவில்லை. ஆல்ரவுண்டர் அசார் மெக்மூத் 2 விக்கெட் எடுத்தார். அவருக்கு ஆதரவாக அவானா, பி. குமார்,  சாவ்லா, மற்றும் ஹாரிஸ் ஆகியோர் பந்து வீசினர்.  ஐ.பி.எல். போட்டியின் 61 -வது லீக் ஆட்டம் மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க அரங்கத்தில் நடைபெ ற்றது. இதில் கேப்டன் குமார் சங்கக்க ரா தலைமையிலான டெக்கான் சார்ஜ ர்ஸ் அணியும், கேப்டன் டேவிட் ஹஸ் சே தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும் மோதின.  இதில் முதலில் களம் இறங்கிய டெக் கான் சார்ஜர்ஸ் அணி நன்கு பேட்டிங் செய்து சவாலான ஸ்கோரை எடுத்தது. அந்த அணி இறுதியில் நிர்ணயிக்கப்ப ட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்னை எடுத்தது. அந்த அணி சார் பில், 2 வீரர்கள் அரை சதம் அடித்தனர்.  துவக்க வீரராக இறங்கிய எஸ். தவான் அதிகபட்சமாக, 50 பந்தில் 71 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். கிரேக் ஒயிட் 41 பந்தி ல் 67 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கிறிஸ்டியன் 10 பந்தில் 24 ரன்னையும், பார்த்திவ் படேல் 16 பந்தில் 18 ரன்னையும் எடுத்தனர். பஞ்சாப் அணி சார்பில், அசார் மெக்மூ த் 39 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத்தார். தவிர, பி. குமார் மற்றும் அவானா ஆகியோர் தலா 1 விக்கெட்எடுத்தனர். பஞ்சாப் அணி 191 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சவாலான ஸ்கோரை இலக்காக டெக்கான் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந் த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பி ற்கு 194 ரன்னை எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. பஞ்சாப் அணி தரப்பில், தற்காலிக கே ப்டன் டேவிட் ஹஸ்சே அதிரடியாக ஆடி 35 பந்தில் 65 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் அடக்கம். அசார் மெக்மூத் 20 பந்தில் 31 ரன்னை எடுத்தார். தவிர, குர்கீரத் சிங் 12 பந்தில் 29 ரன்னையும், மந்தீப் சிங் 20 பந்தில் 28 ரன்னையும், மார்ஷ் மற்றும் சிட்னிஸ் தலா 11 ரன்னையும் எடுத்தனர். 

டெக்கான் அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஸ்டெயின் 26 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடு த்தார். கிறிஸ்டியன் 31 ரன்னைக் கொடு த்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, கோ னி மற்றும் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியி ன் ஆட்டநாயகனாக டேவிட் ஹஸ்சே தேர்வு செய்யப்பட்டார். 

----------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்