முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பாதுகாப்புக்கு 57 ஆயிரம் போலீசார்-285 கம்பெனி துணை ராணுவம்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 29- தமிழக தேர்தல் பாதுகாப்பு பணியில் 57 ஆயிரம் போலீசாரும் 285 கம்பெனி துணை ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படஉள்ளதாக டி.ஜி.பி. போலோநாத் அறிவித்துள்ளார்.தமிழக போலீஸ் டி.ஜி.பி. போலாநாத் நேற்று  சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழக தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பாரபட்சமின்றி தேர்தல் பாதுகாப்பு பணியாற்ற வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் விவாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2626 வழக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகம் முழுவதும் 57 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 17 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

இதுவரை 200 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளனர். கூடுதலாக 85 கம்பெனி படையினர் வர உள்ளனர். இவர்களுக்காக 8250 ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 54 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago